"கேப்பே" விடாத செந்தில் பாலாஜி.. பாஜக நிர்மலுக்கு வசமான "செக்".. ரூ.10 கோடியாம்.. மாட்டிக்கிட்டாரே!
சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
பாஜக தலைவர்களுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜக தலைவர் அண்ணாமலை சாராய அமைச்சர் என்று அழைத்து வருகிறார்.
சாராய அமைச்சர் என்று அண்ணாமலை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அண்ணாமலை
அதோடு நேற்று கடலூரில் பேட்டி அளித்த போது செந்தில் பாலாஜி பற்றிய கேள்விக்கு.. நாயி.. பேயி.. சாராய கடை ஓனர் கேள்வி கேட்பான். அதற்கு எல்லாம் நான் பதில் அளிக்க முடியாது என்று அண்ணாமலை திமிராக பேசினார். அண்ணாமலையின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களை சந்தித்தது. அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், அவருக்கு அடிப்படை புரிதல் இல்லை என்பதை விட.. அவருக்கு அடிப்படை அரசியல் தெரியவில்லை.

செந்தில் பாலாஜி
அரசியல் பக்குவமில்லை. அரசியலில் எந்த விதமான புரிதலும் இல்லாமல் செயல்படுகிறார், என்று அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். இப்படி பாஜக - செந்தில் பாலாஜி இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நேற்று இரவு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

நிர்மல் குமார்
சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றில் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பரப்பும் வகையில் நிர்மல் குமார் பேசி இருந்தார். அதில் டாஸ்மாக் கொள்முதலில் ஊழல் நடைபெற்று உள்ளது. இதன் மூலம் அமைச்சர் பணம் பெற்றுள்ளார் . அமைச்சர் இந்த ஊழல் காரணமாக ஆதாயம் அடைந்து உள்ளார் என்று கூறினார். ஆதாரங்களை சமர்பிக்காமல் நிர்மல் குமார் இப்படி குறிப்பிட்டு இருந்தார். இதை அவர் ட்விட்டாகவும் போட்டு இருந்தார்.

நோட்டீஸ்
இந்த நிலையில்தான் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆதாரம் இன்றி எனக்கு எதிராக அவதூறு பரப்பி உள்ளார். அவர் பொய் சொல்கிறார். இதற்கு நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications