செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை! ஆபரேஷன் எப்படி நடக்கும்? விபரம்
சென்னை: அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை எப்படி நடக்கும்? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையின்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின்போது அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் தொடங்கின. இந்நிலையில் தான் இன்று(புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் எனும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பைபாஸ் அறுவை சிகிச்சை எப்படி நடக்கும்? என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது இதயத்துக்கு ரத்தம் எடுத்து செல்லும் நாளங்களில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட அடைப்புகள் இருந்தால் மேற்கொள்ளப்படும் சிகிச்சையாகும். செந்தில் பாலாஜிக்கும் இதயத்தின் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதால் தான் நாளை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த அறுவை சிகிச்சையின் நோக்கம் என்னவெனில் இதயத்தின் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளுக்கு பதிலாக மாற்று வழியில் இதயத்துக்கு ரத்தத்தை சீராக எடுத்து செல்வது தான். இந்த சிகிச்சை செய்யும்போது முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மயக்க மருந்து கொடுக்கப்படும். அவர் மயங்கிய நிலையில் இருக்கும்போது அவரது மார்பு பகுதியில் லேசாக வெட்டி இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும்.
அதாவது இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்லும் அடைப்புள்ள ரத்த நாளங்களுக்கு பதிலாக புதிதாக ரத்த பாதைகள் உருவாக்கப்படும். இதற்காக கால்களில் இருக்கும் நரம்புகள் டாக்டர்கள் வெட்டி எடுத்து பாதிக்கப்பட்ட ரத்து நாளங்களுக்கு பதிலாக பொருத்துவார்கள். இந்த சிகிச்சை முடிய 3 முதல் 4 மணிநேரங்கள் வரை ஆகும். இந்த வகையில் தான் நாளை செந்தில் பாலாஜிக்கும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி 3 முதல் 5 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். அதன்பிறகு நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவார். மேலும் கால்களில் இருந்து நரம்புகள் எடுக்கப்படும் என்பதால் நடப்பதில் சிரமம் இருக்கும். இருப்பினும் ஒருவார பயிற்சிக்கு பிறகு இயல்பாக நடக்க முடியும். அதன்பிறகு சில மாதங்கள் ஓய்வு எடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி மாத்திரை, மருந்துகள் எடுத்து கொண்டால் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications