தமிழக மின்வாரிய காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்... அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..!
சென்னை: தமிழக மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில் 56 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதால் அந்த பணியிடங்களை அரசு எப்போது நிரப்பும் என்ற எதிர்பார்ப்பு மின்வாரிய பணிகளுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு இருந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தற்போதைய சூழலில் இருக்கும் பணியாளர்களை கொண்டு மின் வாரிய பணிகளை நிர்வகித்து வருவதாகவும் கூறினார்.
விரைவில் மின் வாரியத்தில் உள்ள இந்த அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும் எனக் கூறினார். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் மின்சாரத்துறை செயல்பட்டதா என்பதே கேள்விக்குறியாக உள்ளதாகவும் எந்தப் பணிகளும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாக தெரியவில்லை எனவும் கூறினார்.
வீடுகளில் மின் கணக்கீடு எடுக்கும் பணிகளுக்கு 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே இருப்பதாகவும் இதனால் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாகவும் தன்னை விவசாயி விவசாயி என்று மார்தட்டிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் வஞ்சித்து வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
9498794987 என்ற ஒரே எண் மூலம் மின் துறை சார்ந்த அனைத்து புகார்களும் பெறப்பட்டு வருவதாகவும் இதுவரை 3 லட்சம் புகார்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 97% தீர்வு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
இதனிடையே மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு லட்சக்கணக்கான இளைஞர்களையும், மின் வாரியத்தில் பணி எதிர்பார்ப்போரையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது.
முதலமைச்சர் அறிவித்துள்ள படி லஞ்ச லாவண்யங்களை தவிர்த்து, தகுதி மற்றும் திறமையை மட்டுமே அடிப்படையாக கொண்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கேஸ் சிபிசிஐடி கைக்கு போயிருச்சு! ஹார்ட் டிஸ்க் வழக்கு.. டிஜிபி அதிரடி! அடுத்து சிக்கப் போவது யார்? -
EPFO முக்கிய அறிவிப்பு.. இனி முக்கிய சேவைகளுக்கு ஆதார் முக அங்கீகாரம் அவசியம்.. யாருக்கு கட்டாயம்? -
மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு! format செய்து பெங்களூரில் 2500 ரூபாய்க்கு விற்றது அம்பலம்! -
விமான நிலையங்களில் வேலை.. திருச்சியிலும் காலியிடம்! டிகிரி போதும்.. இன்றே கடைசி நாள் -
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications