ஷாஜகான் வார்னிங்.. அமைச்சர் ரமேஷும் அதையே சொல்றாரு.. திமுக 3வது இடத்துக்கு போனதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையிலான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.. குறிப்பாக, ஆபாசமான பேச்சு, தனிப்பட்ட விமர்சனம், பெண்களை அரசியலுக்குள் இழுப்பது போன்ற விவகாரங்களை முன்வைத்து தவெக அமைச்சர்கள் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இன்றைய தினம்கூட, அமைச்சர் ரமேஷ் திமுகவை கடுமையாக சாடிய நிலையில், உடனே அமைச்சர் ஷாஜகானும் இதே விவகாரத்தை கையில் எடுத்திருப்பது பெரும் கவனம் பெற்று வருகிறது..!!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், ஆபாசமாகவும், அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவது திமுகவின் டிஎன்ஏவிலேயே இருப்பதாக குற்றம்சாட்டினார். திமுகவினர் ஆபாசமாக பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம் என்றும் அவர் விமர்சித்தார்.

Shajahan

மீண்டும் திமுக மீது பாய்ந்த ரமேஷ்

தொடர்ந்து ரமேஷ் பேசியபோது, "அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் குறித்து திமுகவினர் ஆபாசமாக பேசி வருகிறார்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசி வருகிறார்..

ஆபாசமாகவும், அவதூராகவும், கீழ்த்தரமாகவும் பேசுவது திமுகவின் டிஎன்ஏ-விலேயே உள்ளது. அவர்கள் ஆபாசமாக பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம்.

திமுக ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட சீர்கேடுகளை எங்களது அரசு சரிசெய்து வருகிறது.. மழை நின்றாலும் தூவானம் விடுவதில்லை என்பது போல கடந்த ஆட்சியின் சீர்கேடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. எங்களது ஆட்சியை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார்? பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று ரமேஷ் காட்டமாக கூறினார்..

அமைச்சர் ஷாஜகான்

இந்த நிலையில், அமைச்சர் ஷாஜகானும் திமுக தலைவர்களின் பேச்சை விமர்சித்துள்ளார். "திமுகவின் தலைமை நிர்வாகத்தில் இருக்கும் ஆ.ராசா, சேகர்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் தவெகவை நோக்கி கடுஞ்சொற்களையும், தரம் தாழ்ந்த வார்த்தைகளையும் பயன்படுத்தி வருகிறார்கள்..

அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சிப்பதில் தவறில்லை.. ஆனால் அதையும் தாண்டி பெண்கள் மற்றும் குடும்பத்தினரை அரசியல் பேச்சுக்குள் இழுத்து வசைபாடுவது ஏற்கத்தக்கதல்ல.. இதுபோன்ற பேச்சுகளுக்கு திமுகவுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றம்தான் காரணம்..

10 மாவட்டங்கள் - 3வது இடத்தில் திமுக?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை, அதுமட்டுமல்லாமல் 59 தொகுதிகளில் திமுக கூட்டணி 3வது இடத்துக்கு சென்றுள்ளது சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை... இதுதான் திமுக நிர்வாகிகளை நிலைதடுமாறச் செய்துள்ளது..

இதன் காரணமாகவே தரம் தாழ்ந்த வார்த்தைகளை திமுக பயன்படுத்துகிறது.. இப்படியே பேசி கொண்டிருந்தால், திமுகவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.. தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்வது போலாகிவிடும்" என்று எச்சரித்து பேசியிருக்கிறர்,.

விரைவில் இடைத்தேர்தல் வரப்போகிறது.. இப்படி ஒரே நாளில் அமைச்சர் ரமேஷும், அமைச்சர் ஷாஜகானும் திமுகவின் பேச்சு விவகாரத்தை முன்வைத்து விமர்சித்திருப்பது, தவெக தரப்பில் இந்த விவகாரம் முக்கியமான அரசியல் பிரச்சாரமாக முன்னெடுக்கப்படுவதை காட்டுகிறது.

தவெகவுக்கு பிளஸ் பாயிண்ட்டா?

அதேசமயம், திமுக தலைவர்களின் பேச்சை முன்வைத்து, தவெக அமைச்சர்கள் இப்படி தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது, அக்கட்சிக்கு அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குறிப்பாக, ஆபாச பேச்சு, தனிப்பட்ட விமர்சனம், பெண்கள் மற்றும் குடும்பத்தினரை அரசியலுக்குள் இழுப்பது போன்ற விஷயங்களை தொடர்ந்து முன்வைப்பதன் மூலம், திமுகவுக்கு எதிரான ஒரு அரசியல் பிம்பத்தை தவெக உருவாக்க முடியும்...

எனினும் விஜய் தலைமையிலான கட்சி திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தாமல், தனது அரசியல் கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்துவதும் முக்கியம். அதனால் இந்த விவகாரத்தை தவெக எப்படி அரசியல் ரீதியாக பயன்படுத்தப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்பாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+