டீசல் இனி வேண்டாம்.. சென்னையை கலக்க வரும் மின்சார பேருந்து.. அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட்நியூஸ்!
சென்னை: சென்னையில் தற்போது டீசல் மூலம் ஓடும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காற்று மாசை குறைக்கும் நோக்கத்தில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்பேருந்துகள் எப்போதிலிருந்து பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்பது தீவிர பிரச்னையாக இருக்கிறது. இதற்கு காரணம் பூமியின் வெப்பநிலை உயர்வுதான். தொழிற்சாலைகள், வாகன புகை, கிரீன்ஹவுஸ் வாயுவை வெளியேற்றும் மின்சாதன பொருட்களின் பயன்பாடு ஆகியவை பூமியின் வெப்பத்தை உயர்த்துகிறது. என்னதான் நாம் முயற்சி செய்தாலும் இதை முற்றிலுமாக தடுக்க முடியாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாசு ஏற்படாமல் நம்மால் தடுக்க முடியும்.

இதனை கருத்தில் கொண்டுதான் ஐரோப்பிய நாடுகள் மின்சார வாகனத்திற்கு மாறியிருக்கின்றன. இந்தியாவிலும் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற மாநகராட்சி முயன்று வருகிறது.
தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 டிப்போக்கள் மூலம் கையாளப்படும் இந்த பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் புதியதாக 100 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு டென்டர் கோரப்பட்டிருக்கின்றன. இந்த பேருந்துகள் பாரிமுனை-பூந்தமல்லி, அடையாறு-தாம்பரம் (மேற்கு), திருவான்மியூர்-பெரம்பூர், தியாகராயநகர்-திருப்போரூர், திருவான்மியூர்-தாம்பரம், சென்னை சென்ட்ரல்-திருவான்மியூர், பாரிமுனை-கோயம்பேடு, பாரிமுனை-தாம்பரம், பாரிமுனை-கே.கே.நகர் என 27 வழித்தடங்களில் இயக்கப்பட இருக்கிறது. டெண்டரில் பேருந்துகள் வாங்கும் நிறுவனம், அதை இயக்கும் உரிமையையும் பெறும்.
இந்த பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, ஆட்டோமேட்டிக்காக பயணிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையிலான கதவுகள், பெரிய கண்ணாடியுடன் கூடிய ஜன்னல்கள், தீ அணைக்கும் கருவி, முதல் உதவி பெட்டகம் போன்றவை இருக்கும். அதேபோல இதில் 2+1 என்ற அடிப்படையில் 35 பேர் அமரும் வகையிலான இருக்கைகள், 35 பேர் நின்றவாறு பயணம் செய்யும் இடவசதியும் இருக்கும்.
எனவே மின்சார பேருந்துகள் மீது சென்னை மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இப்பேருந்துகள் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் வாங்க இருக்கிறோம். இதற்கான டெண்டர் பணிகள் நடைமுறையில் இருக்கின்றன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்படும். இதற்கு அடுத்த கட்டமாக 400 பேருந்துகள் வாங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் முதல் மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சர் தற்போது விளக்கமளித்துள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications