ஹை டென்சனில் அரசு.. கிளாம்பாக்கத்தால் தொடரும் சர்ச்சை! சதி நடக்குதாம் - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்து உள்ளார்.
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு வந்து செல்லும் பேருந்து முனையமாக பல ஆண்டுகளாக கோயம்பேடு இருந்து வந்தது. இந்த நிலையில் வெளி மாவட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் மிகப்பெரிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் சென்னைக்கு உள்ளே இருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து சென்று பழக்கப்பட்ட மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

சென்னை மாநகருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து வர முறையான போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை என பலரும் விமர்சித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வரும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்பட வேண்டும் என்றும், கிளாம்பாக்கத்தில் இருந்தே வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இதனை கண்டித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டமும் நடத்தினர்.
மறுபக்கம் இரவு நேரத்தில் கிளாம்பாக்கம் வரும் பயணிகளை அழைத்து செல்ல போதிய பேருந்துகள் இல்லை என்பதால் பேருந்து நிலைய நடைமேடைகளிலேயே பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சி செல்லும் பேருந்துகள் இல்லை என்று கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 2 வது நாளாக நேற்று இரவு போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "நள்ளிரவு நேரத்தில்தான் பேருந்துகள் இல்லை என்ற புகார் எழுந்து உள்ளது. காலை, மாலை நேரங்களில் பேருந்துகள் குறைவு என்ற பிரச்சனை இல்லை. திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு 133 பேருந்துகள் சென்றன. அதிக அளவிலான பயணிகள் வந்த காரணத்தால் 130 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பப்பட்டன
குறைவான எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயங்குகிறது என்ற செய்தியை பரப்பினால், பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிகளவில் ஏறுவார்கள் என்ற நோக்கில் உள்நோக்கத்தோடு இதனை சிலர் செய்து வருகிறார்கள். சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். விரைவில் முடிச்சூர் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும்." என்றார்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications