அமைச்சர் சிவசங்கர் அவர்களே, இது ஒரு நல்ல முயற்சி.. ஆனால்? அறப்போர் இயக்கம் பரபரப்பு அறிக்கை
சென்னை: அமைச்சர் சிவசங்கர் அவர்களே, ஒரு நல்ல முயற்சியை துவங்கி இருக்கிறீர்கள். ஆனால் அது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருந்தால் யாருக்கும் பயன் இல்லை. முதலில் போக்குவரத்துத்துறை அங்கீகாரம் பெற்ற உணவகங்களின் முழுமையான பட்டியலை வெளியிடுங்கள். மேலும் இந்த புகார் எண்ணை அனைத்து அரசு பேருந்துகளிலும் எழுத சொல்லுங்கள் என அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வோர் தங்களுக்கு தெரிந்த குறைகள், மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையில், தமிழக அரசு இணையதளம் மற்றும் தொடர்பு எண்ணை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பொது மக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி எண் (1800 599 1500) மற்றும் பொது இணையதளம் "(அரசு பஸ்)" திட்டங்களை துவக்கி வைத்தார்.
இதனால் பயணிகளுக்கு அழைப்புக் கட்டணம் எதுவும் இல்லை. பயணம் செய்யும் பயணிகள். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்கள், குறைகள் மற்றும் தகவல்களையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

குறுந்தகவல்
இதன்படி பயணிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து அழைப்புகளைப் பெறுவதற்கான வசதி பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமையகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகள் பிரத்யேக அடையாள எண் ஒதுக்கப்பட்டு. பதிவு செய்யப்பட்டு. பின்னர் ஒப்புகை குறுந்தகவல் பயணிகளுக்கு அனுப்பப்படும்.

பேருந்து இயக்கம்
பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் உடனுக்குடன் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் பொதுமக்கள், பேருந்துகளின் தூய்மை, தாமதமாக இயக்குதல், பேருந்து பழுதடைதல், பேருந்து நிலையங்களில் உரிய பேருந்துகள் இல்லை, பேருந்து நிலையங்களில் அதிக நேரம் காத்திருப்பது, பேருந்து நிறுத்தங்களில் அதிக நேரம் காத்திருப்பது, ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தங்களைத் தவிர்ப்பது, பயணிகளின் பொருட்கள் தொலைந்து போவது, பேருந்துகளில் பணியாளர்கள் தவறான நடத்தை, சக பயணிகளால் துன்புறுத்தல், பேருந்துகளை மோசமாகப் பராமரித்தல், விபத்துகள், வெள்ளம், கலவரங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். பேருந்து இயக்கம் தொடர்பான விசாரணை, பண்டிகைக் கால சிறப்பு பேருந்து இயக்கம் போன்ற தகவல்களையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

தவறான எஸ்எம்எஸ்
இந்நிலையில் போக்குவரத்து புகார் எண் தொடர்பாக அறப்போர் இயக்கம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், " புகார் எண் வெளியிட்டால் மட்டும் போதுமா? புகார்களை எப்படி கையாள வேண்டும் என்ற திட்டமிடல் வேண்டாமா? புகாரை கொடுத்து அது பதிவானதாக SMS வந்த அடுத்த சில நொடிகளில் புகாருக்கு தீர்வு காணப்பட்டதாக இன்னொரு SMS வருகிறது. உடனே மீண்டும் புகார் எண்ணை அழைத்து இந்த விஷயத்தை சொன்னவுடன் அந்த SMS தவறுதலாக அனுப்பப்பட்டதாக சொல்லி மீண்டும் ஒரு புகார் எண் அனுப்பப்படுகிறது.

அரசு பேருந்துகள் நிறுத்தம்
அந்த புகாரும் அடுத்த 40 நிமிடத்தில் தீர்வு காணப்பட்டதாக முடித்து வைக்கப்படுகிறது. பிறகு SETC அலுவலர் அழைத்து நீங்கள் புகார் கொடுத்த உணவகம் அரசாங்கத்தின் பேருந்துகள் நிறுத்தும் அங்கீகாரம் பெறவில்லை அதனால் உங்கள் புகாரை விசாரிக்க முடியாது என்று குறிப்பிடுகிறார். அங்கீகாரம் பெறாத உணவகத்தில் அரசு பேருந்துகள் ஏன் நிறுத்தப்படுகிறது என்று கேட்டால் அது வேற டிபார்ட்மெண்ட் ஆட்களை கேட்க வேண்டும் என்று சொல்லி இணைப்பை துண்டித்து விடுகிறார்.

நல்ல முயற்சி
அமைச்சர் சிவசங்கர் அவர்களே, ஒரு நல்ல முயற்சியை துவங்கி இருக்கிறீர்கள். ஆனால் அது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருந்தால் யாருக்கும் பயன் இல்லை. முதலில் போக்குவரத்துத்துறை அங்கீகாரம் பெற்ற உணவகங்களின் முழுமையான பட்டியலை வெளியிடுங்கள். மேலும் இந்த புகார் எண்ணை அனைத்து அரசு பேருந்துகளிலும் எழுத சொல்லுங்கள். தமிழக மின்சார வாரியம் மற்றும் சென்னை காவல்துறை போல டிவிட்டர் தளத்திலும் புகார்களை பெற்றுக் கொள்ள SETCக்கு ஒரு டிவிட்டர் கணக்கு துவங்குங்கள். அறப்போர் இயக்கம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்" இவ்வாறு அறப்போர் இயக்கம் தனது பதிவில் கூறியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications