குடிநீர் வடிகால் வாரியம் செயல்பாடு... எ.வ.வேலு கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதில்
சென்னை: கடந்த 8 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 11,140 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும், கூடுதல் நிதி கிடைத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இன்னும் அதிகம் கட்டப்படும் அவர் உறுதியளித்தார்.

ஓவர் டேங்க்
உள்ளாட்சித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தான் நமது அன்றாட அடிப்படை தேவைகளான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. பைப்லைன் தொடங்கி கூட்டு குடிநீர் திட்டங்கள் வரை இந்த வாரியம் ஆற்றும் அரும் பணிகள் ஏராளம். ஆனால் நம்மில் பலருக்கு இப்படியே ஒரு வாரியம் இருப்பதே தெரியாது.

குடிநீர் வாரியம்
திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இப்போது அந்த வாரியத்தின் செயல்பாடு குறைந்து வருவதாகவும் கூறினார். மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.

11,140 டேங்க்
திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த 8 ஆண்டுகளில் 11,140 பாதுகாக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இன்னும் கூடுதல் நிதி கிடைத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கோ ஆப்டெக்ஸ்
இதனிடையே கோ ஆப்டெக் விற்பனை நிலையம் அமைக்க இடம் கிடைப்பது அரிதாக உள்ளதாகவும், உரிய இடம் கிடைத்தால் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் அதிகரிக்கப்படும் என்ற தகவலை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications