Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் மீது தேமுதிகவினருக்கு நல்ல அபிப்பிராயம்! பிரேமலதாவுக்கு இது தேவையில்லாத வேலை! -SS சிவசங்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த விஜயகாந்த் உடலுக்கு 2 முறை நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதாலும், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தியதாலும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது தேமுதிக தொண்டர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரேமலதா திமுகவை கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறார் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் இறந்து இவ்வளவு குறுகிய நாட்களில் பிரேமலதா இப்படி அரசியல் செய்வது தேவையற்ற வேலை என விமர்சித்துள்ளார். விஜயகாந்துக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது அவர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் வைத்திருந்த மரியாதையே தவிர வேறு காரணம் அல்ல என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இதனைக் கூறினார்.

Minister SS Sivashankar says, DMDK Cadres has a good opinion of the Chief Minister Stalin

பிரேமலதா கூட்டணி விவகாரத்தில் ஏதோ ஒரு முடிவெடுத்துவிட்டார் எனக் கருதுவதாகவும் அந்த முடிவுக்கு தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக் இப்போதே திமுகவை கண்டித்து இப்படியொரு அரசியல் நிலைப்பாடு எடுத்திருக்கிறார் எனவும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் செய்த மக்கள் நலப் பணிகளை மறைக்கும் முயற்சியில் திமுகவினரும், அங்குள்ள அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி 4 நாட்களுக்கு முன்னர் கண்டன அறிக்கை விடுத்திருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, வரும் 20ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் சிவசங்கர் இப்படி தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே அண்ணாமலைக்கு நாட்டு நடப்பே தெரியாது என்றும் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டியில் படிப்பவர் அவர் எனவும் விமர்சித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர். போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் எதற்காக போராடுகிறார்கள் என்பதே தெரியாமல் அண்ணாமலை கருத்துச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+