நாளைக்கு ஒருநாள் நீதான் எம்எல்ஏ.. விஏஓவிடம் உருக்கமாக பேசிய அமைச்சர் சிவசங்கர்.. சுவாரசிய சம்பவம்!
சென்னை: குன்னம் தொகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அப்பகுதி விஏஓ ஒருவரிடம் பேசிய வீடியோ இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் அமைச்சராக இருப்பவர் திமுகவை எஸ்எஸ் சிவசங்கர். இந்த நிலையில் குன்னம் தொகுதியில் உள்ள சில கிராமங்களில் நீர் தேங்கி இருப்பதை இவர் நேற்று நேரில் பார்வையிட்டார்.
அதேபோல் அங்கு இருக்கும் கிராமங்களில் வடிகால் வசதியை சோதனை செய்து, கழிவு நீர் குழாய் ஏற்படுவதற்கான வழிகாட்டுதல்களை கிராம நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

என்ன பேசினார்
இந்த நிலையில் தற்போது குன்னம் பகுதியில் அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் பார்வையிட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது. நேற்று இன்றும் அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் பார்வையிட்ட போது அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் வடிகால் வசதி இல்லை. மழை பெய்தால் நீர் தேங்குகிறது என்று குற்றச்சாட்டு வைத்தனர். இதையடுத்து அங்கு கிராம நிர்வாக அலுவலரை சந்தித்த எஸ்எஸ் சிவசங்கர் கழிவு நீர் குழாய் ஏற்படுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

அறிவுரை
விஏஓவிடம் பேசிய எஸ்எஸ் சிவசங்கர், இங்க பாருங்க.. இந்த இடத்தில் குழி வெட்டுங்க. பெருசா குழி வெட்ட வேண்டாம். தண்ணீர் செல்லும் அளவிற்கு குழி வெட்டினால் போதும். கம்ப்ளீட்டா நீங்க இருந்து வெட்டி கொடுங்க. நீங்க மேற்பார்வை செய்யுங்கள். நான் சொல்றேன், நாளைக்கு ஒருநாள் நீதான் எம்எல்ஏ. பத்திரமா இருந்து பண்ணுங்க என்று கூறினார்.

திமுக நிர்வாகி
அதற்கு அருகில் இருந்த திமுக உறுப்பினர் ஒருவர், சார் நாங்களே இந்த வேலையை பார்க்கிறோம். நாங்க கவனிச்சிக்கிறோம் என்பது போல கூறினார். அதற்கு அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், ஊர் பொறுப்பை கட்சிக்காரர்களிடம் ஒப்படைத்தால் எதிர்கட்சிக்காரர்கள் சண்டைக்கு வருவாங்க.

எஸ்எஸ் சிவசங்கர்
அவர் விஓஏ. அவர் எல்லோருக்கும் பொதுவானவர். எல்லோருக்கும் பொதுவாக இருந்து வேலை பார்ப்பார். நாளை என்னுடைய செலவில் ஜேசிபி அனுப்பி வைக்கிறேன். அவர்கள் குழி தோண்டி வடிகால் ஏற்படுத்துவார்கள். நீர் வெளியேறிவிடும்.

சாலை பணிகள்
அதன்பின் சாலை போடும் பணிகள் நடக்கும். கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். விஏஓவிடம் நீங்கதான் ஒருநாள் எம்எல்ஏ என்று அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் கூறிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications