மாவட்டத்திற்கு ஒரு அரசு செவிலியர் கல்லூரி! சட்டசபையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் புதிய தகவல்!
சென்னை: மாவட்டத்திற்கு ஒரு அரசு செவிலியர் கல்லூரியோ அல்லது ஒரு செவிலியர் பயிற்சி பள்ளியோ அமைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்கு என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மாவட்டந்தோறும் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்பதை போல் இனி மாவட்டந்தோறும் அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்பட்டால் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் எளிதாக செவிலியராக ஆக முடியும்.
தமிழகம் மட்டுமின்றி தேசியளவிலும் ஏன் உலகளவிலும் கூட செவிலியர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சட்டசபையில் கேள்வி
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணத்தில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் என வினவினார். அதற்கு பதிலைத்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கும்பகோணம் என்று மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு அரசு செவிலியர் கல்லூரியோ அல்லது ஒரு செவிலியர் பயிற்சி பள்ளியோ அமைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்கு எனத் தெரிவித்தார்.

விரைவில் பணிகள்
அமைச்சர் மா.சுப்ரமணியன் சட்டப்பேரவையில் அளித்த பதிலை வைத்து பார்க்கும் போது, விரைவில் மாவட்டந்தோறும் அரசு செவிலியர் கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் மா.சு.வின் இந்தக் கோரிக்கை செவிலியர்கள் மட்டும் செவிலியர் படிப்பு படிக்க விரும்புவோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

உலகம் முழுவதும்
செவிலியர் பணிக்கு உலகம் முழுவதும் தேவைகள் இருந்து வருவதும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு இந்த தேவை அதிகரிப்பதும் கவனிக்கத்தக்கது. இதனால் பலரும் செவிலியர் படிப்பு மீது ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அரசு செவிலியர் கல்லூரி தொடர்பாக அமைச்சர் மா.சுப்ரமணியன் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வேலை வாய்ப்பு
புதிதாக நிறுவப்படவுள்ள அரசு செவிலியர் கல்லூரிகள் மூலம் பி.எஸ்.சி நர்சிங் படித்தோருக்கு அதில் பயிற்றுநராகவோ அல்லது தகுதி மற்றும் திறமை அனுபவத்தின் அடிப்படையில் விரிவுரையாளராகவோ பணியாற்றக் கூடிய வாய்ப்புகளும் உருவாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications