போச்சு.. ஒரே மாஸ்க்கை தொடர்ந்து போட்டால் "கருப்பு பூஞ்சை" தாக்குமாம்.. குண்டை போடும் நிபுணர்கள்!
சென்னை: ஒரே மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டிருந்தால், கருப்பு பூஞ்சை பாதிக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது!
Recommended Video
கடந்த வருடம் தாக்கிய கொரோனா வைரஸ் முதல் அலை பற்றின ஆராய்ச்சியே இன்னமும் முடியவில்லை... அது எந்த மாதிரியான நோய், அறிகுறிகள் என்ன, மருந்து என்ன, என்பது குறித்து திட்டவட்டமாக எதையும் அறிஞர்களால் சொல்ல முடியவில்லை.. தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
அதற்குள் 2வது அலை வந்துவிட்டது.. இந்த அலை முதல் அலையைவிட படுபயங்கரமாக இருக்கிறது.. முதல் பரவலால் இறந்தவர்களைவிட இந்த 2வது பரவலால் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது.. காரணம், இந்த பரவல், இளைஞர்கள், குழந்தைகள் என வயது வித்தியாசம் பாராமல் அனைவரையுமே தாக்கி வருகிறது.

பரவல்
2வது பரவல் குறித்த ஆராய்ச்சியும் நடந்து கொண்டிருக்கும்போதுதான், 3வது பரவல் ஒன்று வரப்போவதாக சொல்கிறார்கள்.. அது இந்த 2வது பரவலைவிட இன்னும் பயங்கரமாக இருக்குமாம்.. அதனால் இதற்கெல்லாம் தடுப்பூசிதான் தீர்வு என்று, உலக மக்கள் தடுப்பூசியை செலுத்துவதில் கவனத்தை செலுத்தி உள்ளனர். இதற்கான முயற்சிகளிலும் உலக நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

கருப்பு பூஞ்சை
இப்படிப்பட்ட சூழலில்தான் திடீரென அடுத்த பிரச்சனையான கருப்பு பூஞ்சை நோய் கிலியை கிளப்பி கொண்டிருக்கிறது.. இந்தியாவில் மட்டும் 7,000 பேர் அவதியுற்று வருவதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டுவரும் நீரிழிவு நோயாளிகளுக்கே இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொன்னார்கள்..

சிறுமி
ஆனால், இந்த நோய் குறித்த தகவலிலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.. குஜராத்தில் 13 வயது சிறுமி ஒருவருக்கு இந்த பூஞ்சை நோய் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது... இதையடுத்து, டாக்டர்கள் கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சைகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று விழிப்புணர்வுகளை சொல்லி வருகிறார்கள்.

பூஞ்சைகள்
அதன்படி, ஒரே மாஸ்க்கை அதிக முறை தொடர்ந்து பயன்படுத்தும்போது கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று அபாயம் இருப்பதாக எய்ம்ஸ் டாக்டர்கள் சொல்கிறார்கள்.. ஏனென்றால், மாஸ்க் என்பது துணியால் ஆனதுதான்.. அந்த மாஸ்க்குகள் ஈரத்துடன் இருப்பதால் அதில் பூஞ்சைகள் தொற்றி கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.. அதனால், துணிகளால் ஆன மாஸ்க்கை அதிக முறை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத்துறை
குளிர்ந்த ஆக்சிஜன் சிலிண்டர்களில் இருந்து நேரடியாக நோயாளிகளுக்கு ஆக்சிஜனை செலுத்துவதாலும் இந்த கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பு ஏற்படுகிறதாம்.. அதனால், ஆக்சிஜன் பயன்பாடு, ஸ்டீராய்டு பயன்பாடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்து கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மருந்து குப்பிகள்
இதையேதான், சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகரும் தெரிவித்துள்ளார்.. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இவர், "கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் சிலரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கர்நாடகத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது... இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு 1,150 ஆம்போடெரிசின் மருந்து குப்பிகளை கர்நாடகத்திற்கு ஒதுக்கியுள்ளது.

ஸ்டீராய்டு மருந்து
இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதற்கான காரணம் என்ன என்பதை அறிய ஒரு மருத்துவ நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அதிகளவில் ஸ்டிராய்டு மருந்தை பயன்படுத்துவது, சுத்தப்படுத்தாமல் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது, ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்துவது, படுக்கையை நீண்ட காலம் பயன்படுத்துவது போன்றவற்றால் இந்த நோய் பரவுவதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஆலோசனை
அதனால், கொரோனா ஆஸ்பத்திரிகளில் புதுப்பிக்கும் பணிகளை நிறுத்துமாறும் நிபுணர் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.. தீவிர சிகிச்சை பிரிவுக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், மருத்துவ வசதிகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பரிசோதனை நடத்த வேண்டும் என்று நிபுணர் குழு கருத்து தெரிவித்துள்ளது. அதன்படியே, அவர்களுக்கு 3-வது நாள், 7-வது நாள், 21-வது நாளில் இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது" என்றார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications