நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் உறுதி தரவில்லை.. நேரில் சந்தித்த பிறகு தங்கம் தென்னரசு ஆதங்கம்
சென்னை: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக ஆளுநர் ரவி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் உள்ளபடியே தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த மாதம் தன்னை சந்தித்த முதலமைச்சரிடம் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு அமைச்சர்கள்
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் 2-வது முறையாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பக் கோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் இன்று காலை ஆளுநர் ரவியை ராஜ்பவனின் சந்தித்து பேசினர். அந்தச் சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நீட் விலக்கு மசோதாவை டெல்லிக்கு அனுப்புவது தொடர்பாக தங்களிடம் ஆளுநர் எந்த உத்தரவாதத்தை அளிக்க மறுத்ததாக கூறினார்.

ஆளுநரின் செயல்
நீட் தேர்வு விலக்கு மசோதா மட்டுமின்றி கூட்டுறவு சங்க திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட இன்னும் பல மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது உள்ளபடியே தங்களுக்கு வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேற்கண்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தங்களிடம் எந்தவித காலவரையறையும் தெரிவிக்காததால் அவர் கொடுக்கும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டசபை மாண்பு
நூற்றாண்டு கண்ட தமிழக சட்டசபையின் மாண்பையும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கடந்த மாதம் தன்னை சந்தித்த முதலமைச்சரிடம் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக கூறிய ஆளுநர், இதுவரை அதற்கான நடவடிக்கையை தொடங்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

உரசல் அதிகரிக்கலாம்
இதன்மூலம் ஆளுநர் -தமிழக அரசு இடையேயான உரசல் அதிகரிக்கத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஆளுநரை திரும்பப்பெறக் கோரும் முழக்கங்கள் இனி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தரப்பில் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications