பாஜகவின் வானதி சீனிவாசன் சிரிக்கிறாங்க.. கூட்டி கழிச்சி பாருங்க..அதிமுகவை எச்சரித்த தங்கம் தென்னரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அதிமுக உறுப்பினர் தங்கமணி, அடுத்த 2 ஆண்டுகளில் தமிழக அரசு 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு என ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதாவது ஒரு மாணவருக்கு ரூ.10 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரத்தில் எப்படி தரமான லேப்டாப் வாங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

aiadmk Thangam Thennarasu Tamilnadu Assembly

அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அதில், முதல் கட்டமாக இந்த ஆண்டில் ரூ.2 ஆயிரம் கோடியும், பின் அடுத்த ஆண்டில் ரூ.2 ஆயிரம் கோடியும் வழங்கப்படும். எனவே சராசரியாக ஒரு லேப்டாப்பின் விலை ரூ.20 ஆயிரம் என்ற அளவில் தரமானதாக இருக்கும். அதிமுகவின் மடிவில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி செய்கிறார்கள். கவனமாக இருங்கள்.

எம்ஜிஆர் மீது பெரும் மதிப்பை திமுக கொண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் தனி அன்பும் கொண்டிருந்தவர். எங்களுடன் நீண்ட காலமாக அரசியலில் களமாடி கொண்டிருக்கிறீர்கள். இந்த அரசியல் பயணத்தில் உங்களுடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் பயணித்து கொண்டிருக்கும் வேளையில், உங்களின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு இடத்தில் இருந்து இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதனை மறந்துவிடக் கூடாது. அதுவும் வேறு எங்கோ இருந்து அதிமுக தொண்டர்களின் எதிர்காலத்தை களத்தில் நீர்த்துப் போக செய்யும் அளவிற்கு சாணக்ய தந்திரத்துடன் இந்த கணக்குகளை போட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த மடிக்கணினி விவகாரத்தில் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டதை போல், உங்கள் மடியில் உள்ள கனத்தை பறித்து கொள்ள நினைப்பவர்களிடம் இருந்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் மீதுள்ள உரிமையால் இதனை கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் சிரித்து கொண்டிருக்கிறார். அப்படியானால் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது என்பதை சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இதனைக் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.

இதற்கு அதிமுக உறுப்பினர் தங்கமணி, எந்த கூட்டல், கழித்தல் கணக்கிலும் ஏமாற மாட்டோம். கூட்டணி கணக்கிலும் ஏமாற மாட்டோம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக கூட்டல், கழித்தல் கணக்குகளில் ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+