trb raja : மகன் பதவியேற்பதை முதல் வரிசையில் குடும்பத்துடன் அமர்ந்து ரசித்த டிஆர் பாலு!
சென்னை: திமுக எம்பி டிஆர் பாலுவின் மகனாகிய டிஆர்பி ராஜா, தமிழகத்தின் புதிய அமைச்சராக இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மகன் பதவி ஏற்பதை டிஆர் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தனர்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று தற்போது 3 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து செய்திகள் தீவிரமாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக பால்வளத்துறையில் எழுந்த சிக்கல் காரணமாக அமைச்சர் சா.மு.நாசர் மாற்றப்படுவார் என்றும் உதயநிதி, சபரீசன் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ காரணமாக பிடிஆரும் துறை மாற்றப்படுவார் என்று தகவல்கள் பரவின.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து கடந்த 9-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

டிஆர்பி ராஜா பதவியேற்பு: இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று காலை10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் ரவியுடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக பதவியேற்ற டிஆர்பி ராஜா,ஜீன்ஸ் பேண்டில் மிக கேசுவலாக வந்திருந்தார். அவரது தந்தையும் திமுக எம்பியுமான டிஆர் பாலு மற்றும் டிஆர்பி ராஜாவின் குடும்பத்தினர் அனைவரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். தன் மகன் அமைச்சராக பதவியேற்பதை டிஆர் பாலு முதல்வரிசையில் அமர்ந்து ரசித்தார். இந்த விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் அனைவருமே கலந்து கொண்டனர். மிக எளிமையாக இந்த விழா நடந்தது. வெறும் 9 நிமிடத்தில் விழா முடிந்துவிட்டது. டிஆர்பி ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவிற்கு நிதித்துறையும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழிலநுட்பதுறையும் கொடுக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications