ஆங்கில ஊடகம் எழுப்பிய கேள்வி.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டக்கென சொன்ன பதில்! என்னனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை : முன்னணி ஆங்கில மீடியா இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பாட்னாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பற்றி ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு உதயநிதி பதில் அளித்தார்.

2024ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. வலுவான பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 Minister Udhayanidhi answer about Stalins role in upcoming opposition parties meeting in Patna

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை தர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் இல்லாத எதிர்கட்சிகளின் கூட்டணி என்பது பாஜகவுக்கு சாதகமாகப் போய்விடும் என்றும் ஸ்டாலின் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதுமுள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உட்பட சுமார் 15 கட்சிகள் பங்கேற்கும் எனத் தெரிகிறது. திமுக சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பாட்னா சென்று இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இது அரசியல் அரங்கில் பெருத்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம், முன்னணி ஆங்கில ஊடகமான ANI சார்பில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆங்கிலத்தில் ANI செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆங்கிலத்திலேயே பதில் அளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

"பாஜகவை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் பாட்னா கூட்டத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் பங்கேற்பு மிக முக்கியமானதாக இருக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் இதுபற்றி விளக்குவார்." என உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+