"செம்மொழியான தமிழ்மொழியாம்" பாடலை கேட்டு சட்டென எமோஷ்னல் ஆன உதயநிதி.. அடுத்து செம சம்பவம்
சென்னை: கேலோ இந்தியா போட்டிகளுக்கான லோகோ அறிமுக விழாவில் "செம்மொழியான தமிழ்மொழியாம்" பாடலை கேட்டு அமைச்சர் உதயநிதி சட்டென எமோஷ்னல் ஆனார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் அடுத்தாண்டு தமிழ்நாட்டில் நடக்கிறது. 18 வயதுக்கு உட்பட்டோருக்கு நடத்தப்பட்டும் இந்த போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து இந்த போட்டிகளை நடத்துகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது.
கேலோ இந்தியா: இந்த கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500 வீரர், வீராங்கனைகள் மற்றும் 1600 பயிற்சியாளர்கள், 1000+ நடுவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த தொடரில் மொத்தம் 27 வகையான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் இதில் டெமோ விளையாட்டாக இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே இந்த கேலோ இந்தியா போட்டிகளுக்கான லோகோ அறிமுக விழா நேற்றைய தினம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கேலோ இந்தியா லோகோவை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அமைச்சர் உதயநிதி: போட்டிக்கான வேலுநாச்சியாரின் 'வீரமங்கை' சின்னத்தையும், கேலோ இந்தியா ஜெர்சியையும் அனுராக் தாக்கூர் அறிமுகம் செய்தார். மேலும், இதில் கேலோ இந்தியா போட்டிகளுக்கான தீம் பாடலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்.
எமோஷ்னல் ஆனார்: இந்த நிகழ்ச்சியில் தான் அமைச்சர் உதயநிதி எமோஷ்னல் ஆனார். இந்த தொடக்க நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. அப்போது அதில் பாடகர்கள் "செம்மொழியான தமிழ்மொழியாம்" பாடலை பாடினார்கள். இதைக் கேட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டென உணர்ச்சிவசப்பட்டார்.
தொடர்ந்து தமிழ், தமிழர் சிறப்புகளைக் காட்டும் பல பாடல்களை அவர்கள் பாடிய நிலையில், அதை அமைச்சர் உதயநிதி ரசித்துக் கேட்டார். "செம்மொழியான தமிழ்மொழியாம்" பாடலை கேட்டு அமைச்சர் உதயநிதி சட்டென எமோஷ்னல் ஆன வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதியது தான் "செம்மொழியான தமிழ்மொழியாம்" பாடல். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படலுக்கு இசையமைத்த நிலையில், பல முன்னணி பாடகர்கள் இந்த பாடலை பாடி இருந்தனர்.












Click it and Unblock the Notifications