நாளை மறுநாள் உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்தநாள்! சென்னைக்கு படையெடுக்கும் திமுக நிர்வாகிகள்!
சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு நேரில் வாழ்த்துச் சொல்வதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அதுமட்டுமல்ல சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டமும் நடைபெறுவதால் அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்படுகிறது.

அன்பகம் விழாக்கோலம்: அதேபோல் திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளைய தினம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் நாளை மறுதினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிவிட்டு தான் ஊர் திரும்புவார்கள். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், கூட்டணி, திமுக இளைஞரணி மாநாடு, உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: சேலம் இளைஞரணி மாநாட்டில் 3 லட்சம் பேரை பங்கேற்க வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இளைஞரணி மாநாட்டை எவ்வாறு வெற்றிகரமாக நடத்துவது, அதற்கு மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் எந்தளவுக்கு அவசியம் என்பது பற்றியெல்லாம் நாளைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே உதயநிதியின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் இளைஞரணி நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மூலம் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சராகிய பிறகு முதல் பிறந்தநாள்: இதில் விஷேச தகவல் என்னவென்றால் அமைச்சராகிய பிறகு உதயநிதி ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இந்தாண்டு என்பதால் அரசு உயர் அதிகாரிகளும், காவல் துறை உயர் அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல நேரில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications