இதுதான் "டைம் டேபிள்".. சாட்டையை சுழற்றிய உதயநிதி.. ஹைலைட்டே "அந்த" கட்டுப்பாடுதான்.. வேற ரகம்!
சென்னை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான நிலையில் முக்கியமான சில உத்தரவுகளை தனது அமைச்சரவை நிர்வாகிகளுக்கு பிறப்பித்து உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு, இளைஞர் நலன் துறைக்கு அமைச்சராகி இருக்கிறார். அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக போகிறது. இந்த நிலையில் அமைச்சர் பணி மட்டுமின்றி கட்சி ரீதியான பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் கவனித்து வருகிறார்.
சினிமா பணிகளை முற்றாக நிறுத்திவிட்டு அமைச்சரவை பணிகள் மீதுதான் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

உதயநிதி ஸ்டாலின்
சினிமாவில் நடிப்பதை உதயநிதி ஸ்டாலின் நிறுத்திவிட்டார். இன்னொரு பக்கம் படம் வெளியிடுவது போன்ற பணிகளையும் அவர் நேரடியாக கவனிக்கவில்லை. ரெட் ஜெயிண்ட் நிர்வாகிகள் மட்டுமே கவனித்து வருகின்றனர். சினிமா பணிகள் எதிலும் உதயநிதி பெரிதாக நேரடியாக தலையிட்டுக்கொள்வது இல்லை. அமைச்சராக இருப்பதால் அவருக்கு இதில் பெரிதாக நேரம் கிடைப்பது இல்லை. சமீபத்தில் கோவையில் பல்வேறு விளையாட்டு வீரர்களை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதேபோல் அங்கு உள்ள விளையாட்டு விடுதிகளை பார்வையிட்டார்.

அமைச்சர்
அதன்பின் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் மூலம் கோவையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இதில் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை முதல்வரிடம் இருந்தது. இந்த துறைதான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பல்வேறு கூட்டங்களையும் அவர் நடத்தினார். இன்னொரு பக்கம் கட்சி ரீதியான பணிகளிலும் தீவிரமாக உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.

பணிகள்
திமுகவில் இளைஞரணி சார்பாக மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வெளிமாநிலங்களில் இருக்கும் இளைஞரணியின் மாநில அமைப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான நியமங்களுக்கான விண்ணப்பங்களை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். இந்த விண்ணப்பங்களுக்கான தேதி முடிந்த நிலையில், விரைவில் இதற்கான நேர்காணல் விரைவில் நடக்க உள்ளது. இந்த நேர்காணலை உதயநிதி ஸ்டாலின் நடத்த உள்ளார். இப்படி கட்சி பணிகள், அமைச்சரவை பணிகள், எம்எல்ஏ என்று மூன்றையும் உதயநிதி ஒன்றாக மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் முக்கியமான சில உத்தரவுகளை தனது அமைச்சரவை நிர்வாகிகளுக்கு பிறப்பித்து உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பர்சனல் டைம்
அதன்படி துறை ரீதியான நிகழ்ச்சிகளுக்கு நேர கட்டுப்பாட்டை அவர் கொண்டு வந்து இருக்கிறாராம். அமைச்சரவை பணிகளை காலை 10 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என்று கூறி உள்ளாராம். இது தொடர்பாக கண்டிப்புடன் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம். அதற்கு பின் எம்எல்ஏவாக தொகுதி பணிகளை செய்ய வேண்டும். தொகுதிகளை பார்வையிட வேண்டும். அதன்பின் இளைஞரணி நிர்வாக பணிகளை செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் டைம் டேபிள் போட்டு இருக்கிறார். இந்த மூன்று வேலைகள் முடிந்ததும் கொஞ்சம் பர்சனல் வேலைகளையும், தனது ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தொடர்பான அப்டேட்களையும் உதயநிதி ஸ்டாலின் பெறுகிறாராம். கட்சி பணிகள், அமைச்சரவை பணிகள், எம்எல்ஏ என்று மூன்றையும் உதயநிதி ஒன்றாக மேற்கொண்டு வருவதால் முன்பு இருந்தது போல பர்சனலாக பெரிதாக செலவழிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications