கூலிங் கிளாஸோடு “விங் 2.0” மேடையேறிய உதயநிதி.. திமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு முக்கிய அட்வைஸ்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுக ஐடி விங் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐடி விங் நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 'விங் 2.0' என்ற பெயரில் சென்னையில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகர, மாவட்ட, தொகுதி, ஒன்றிய தகவல் தொழிட்நுட்ப நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அண்மையில், அனைத்து மட்டங்களிலும் ஐடி விங் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

விங் 2.0 கூட்டம்: திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுக ஐடி விங் செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா, , திமுக மருத்துவ அணி செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான எழிலன் நாகநாதன், அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ எம்.கே மோகன், ஐடி விங் இணை செயலாளர் ஆர்.மகேந்திரன், ஐடி விங் ஆலோசகர் கோவி.லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூலிங் கிளாஸ் அணிந்தபடி வருகை தந்தார். மேடை ஏறியபிறகும், ஸ்டைலாக கூலரை அணிந்த படியே இருந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்தக் கூட்டத்தின்போது, திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா, திமுக இளைஞரணி மாநாட்டு நிதியாக ரூ.25 லட்சத்தை வழங்கினார்.

அறிவார்ந்த ஐடி விங்: பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "அரசியலுக்கு இணையாக அறிவியலிலும் ஆர்வம் காட்டும் இயக்கம் திராவிட இயக்கம். சில கட்சிகள் ஐ.டி விங் என்ற பெயரில் அவதூறுகளைத் தான் பரப்பி வருகின்றனர். ஆனால் நாட்டிலேயே அறிவார்ந்த ஐ.டி விங்காக திமுக ஐ.டி விங் செயல்படுகிறது. அதற்காக அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
சமூக வலைதளங்களில் மட்டுமன்றி களத்திலும் ஐ.டி விங் நிர்வாகிகள் சிறப்பாக செயல்படுகின்றனர். அனைத்து அணியினருடனும் ஐ.டி விங் நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும். ஐ.டி விங் நிர்வாகிகள் வேகமாகச் செயல்பட வேண்டிய காலம் இது. எனவே அனைவரும் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அம்பலப்படுத்துங்க: சமூக வலைதளங்களில் திமுக அரசை பற்றி அவதூறு பரப்பும் நபர்களையும், அவர்கள் பரப்பும் பொய் கருத்துகளையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் பாஜக மற்றும் அதிமுகவினர் நம் மீது திட்டமிட்டு அவதூறு பாரப்புவார்கள். அதனை நம் ஐ.டி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும்.

மத்தியில் ஆளும் மோடி அரசின் கேடுகெட்ட திட்டங்களையும், அதனால் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் அம்பலபடுத்துங்கள். எங்கும் அம்பானி.. எதிலும் அதானி, பற்றி எறியும் மணிப்பூர், எல்லாவற்றிலும் ஊழல், பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருப்பது உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக நடித்து வருகிறார்கள், அவர்களையும் அம்பலபடுத்துங்கள். பாஜக - அதிமுகவின் ஐடி விங்குகள் போன்று அவதூறுகளையும் ஆபாச கருத்துகளையும் பதிவிடாமல், அண்ணாவின் வழியில் கடமை, கண்ணியம், கட்டுபாட்டுடன் செயல்பட்டு மோடி ஆட்சிக்கு கெட் அவுட் சொல்வோம்" எனப் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
எதிரிகளின் சூழ்ச்சி: இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "இணையத்தில் தி.மு.கழகத்தின் இதயமாக திகழும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட - தொகுதி அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம். நம் கொள்கை எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும் - பொய்களுக்கும் தக்க பதிலடி தந்து வருவதோடு, நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் கழக தகவல் தொழில்நுட்ப அணியினரை பாராட்டினோம்.
திட்டமிட்டு பரப்பப்படும் Disinformation, அவற்றின் உண்மைத்தன்மை அறியாமல் பகிரப்படும் Misinformation ஆகியவற்றுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இன்னும் ஆற்றலுடன் செயல்படுவோம் என்று புதிய நிர்வாகிகளை வாழ்த்தினோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications