நாளை டெல்லி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்! அமைச்சராகிய பிறகு முதல் பயணம்! என்ன அஜெண்டா?
அமைச்சராகிய பிறகு முதல்முறையாக உதயநிதி டெல்லி பயணம்.
சென்னை: அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களை சந்தித்து பேசும் அவர் மத்திய அமைச்சர்களையும் 28ஆம் தேதி நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடனான டெல்லி பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருப்பார்கள் எனத் தெரிகிறது.

உதயநிதி டெல்லி பயணம்
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் உதயநிதி ஸ்டாலின். அங்கு தனது துறை ரீதியான சில கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை நாளை மறுதினம் சந்தித்து பேசுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்துக்கும் உதயநிதி ஒரு விசிட் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல நிகழ்வுகள்
இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களயும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார் எனத் தெரிகிறது. கடந்த வாரம் காயம் அடைந்த மாணவர்களோடு வீடியோ கால் மூலம் பேசி நலம் விசாரித்து தைரியம் அளித்திருந்தார். இப்போது நேரிலேயே செல்லவுள்ளார்.

28ஆம் தேதி சென்னை திரும்புதல்
இதேபோல் மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடர்பான அழைப்பிதழ்களையும் டெல்லியில் சில முக்கியப் புள்ளிகளுக்கு அவர் நேரில் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 28ஆம் தேதி இரவு சென்னை திரும்பும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம்
அமைச்சராகிய பிறகு உதயநிதி மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் என்பதால் இந்தப் பயணம் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடனான டெல்லி பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருப்பார்கள் எனத் தெரிகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications