Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளையாட்டுத்துறை அமைச்சரான பிறகு ‘மாஸ்’ சம்பவம்.. ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டிகளை காண உதயநிதி அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகளை நேரில் கண்டுகளிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது.

Minister Udhayanidhi Stalin has invited to watch the Squash World Cup matches in chennai

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் நடத்தப்பட்டது. இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, உலக நாடுகள் பங்கேற்கும் பிரமாண்டமான ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி 2023, சென்னையில் வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி நடைபெறுகிறது. 2023 ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகளை நேரில் காண அழைப்பு விடுத்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டிகள் சென்னையில் வரும் ஜுன் 13 முதல் 17 ஆம் தேதி வரை, காலை 10.30-க்கு தொடங்கி இரவு 7.30 வரை நடைபெறவுள்ளன.

8 நாடுகள் - ஏராளமான வீரர்கள் பங்கேற்கவுள்ள இப்போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெருமை கொள்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வை பொதுமக்கள் - விளையாட்டு ஆர்வலர்கள் நேரில் கண்டு மகிழ அன்புடன் அழைக்கின்றோம்." எனத் தெரிவித்துள்ளார்.

 Minister Udhayanidhi Stalin has invited to watch the Squash World Cup matches in chennai

ஸ்குவாஷ் விளையாட்டு அட்டவணை : பிரிவு நிலை (Pool Stage) : ஜூன் 13, 14 & 15 ஜூன் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் - காலை 10.30, மதியம் 1, மாலை 3.30 & மாலை 6 (4 போட்டிகள்)

நாக் அவுட் நிலை: ஜூன் 16 இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் (பிளே-ஆஃப் போட்டிகள்) -காலை 10.30, மதியம் 1 மணி (2 போட்டிகள்)
ஜூன் 16 எக்ஸ்பிரஸ் அவென்யூவில் (அரையிறுதி) - மாலை 3.30 & மாலை 6 மணி (2 போட்டிகள்)
ஜூன் 17 இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் (பிளே-ஆஃப் போட்டிகள்) -காலை 10.30, மதியம் 1 மணி (2 போட்டிகள்)
ஜூன் 17 எக்ஸ்பிரஸ் அவென்யூவில் (இறுதி) - மாலை 4 மணி (1 போட்டி)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+