உதயநிதியை சந்தித்த அசீம் வெளிமன்னா! மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உரிமைக்காக ஓயாது ஒலிக்கும் குரல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உரிமைக்காக ஓயாது குரல் எழுப்பி வரும் அசீம் வெளிமன்னாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து பேசி ஊக்கப்படுத்தினார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெளிமன்னாவை சேர்ந்தவர் முகமது அசீம். பிறக்கும் போதே இரண்டு கைகள் இல்லாமலும், கால்கள் மாறுபட்ட அளவிலும் பிறந்த அசீம் வெளிமன்னா, தாம் ஒரு மாற்றுத்திறனாளி என்பதற்காக சோர்ந்து போய் வீட்டில் முடங்கிவிடவில்லை. யாரிடமும் தனக்கு உதவிக் கேட்டும் சென்று நின்றதில்லை.

Minister Udhayanidhi Stalin met and encouraged Asim Velimanna

இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் நீச்சலில் அபார ஆற்றலை பெற்றிருக்கும் அசீம் வெளிமன்னா கேரளாவின் பெரியாறு ஆற்றில் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு கால்களாலேயே நீந்தி சரித்திர சாதனை புரிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதனிடையே தன்னைப் போல் எத்தனையோ மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் தனது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார் அசீம் வெளிமன்னா.

யுனிசெஃப் அமைப்பின் குழந்தை சாதனையாளர் விருது, இன்ஸ்பைரிங் இந்தியன் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்று குவித்த அசீம் வெளிமன்னா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திப்பதற்காக நேற்று அவரது குறிஞ்சி பங்களாவுக்கு சென்றார். அவருடன் அவருடைய தந்தை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரிய உறுப்பினரும், அமீரக திமுக பொறுப்பாளருமான எஸ்.எஸ்.மீரானும் சென்றிருந்தார்.

Minister Udhayanidhi Stalin met and encouraged Asim Velimanna

அசீம் வெளிமன்னாவுடனா சந்திப்பு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள சமூகவலைதளப் பதிவு வருமாறு; '' கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தம்பி அசீம் வெளிமன்னா, தன்னைப் போல மாற்றுத்திறனுள்ள குழந்தைகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் உலக அளவில் அறியப்படுகிறார். அதன்மூலம், பல்வேறு அங்கீகாரங்களை பெற்று வருகிறார்.''

''சென்னை வருகை தந்துள்ள தம்பி வெளிமன்னா, அவரது குடும்பத்தாருடன் இன்று நம்மை சந்தித்து அன்பை வெளிப்படுத்தினார். மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்து அவர் எடுத்துவரும் முன்னெடுப்புகளை கேட்டறிந்து, அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்தினோம்.'' இவ்வாறு உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

கைகள் இல்லாததால் காலால் அலைபேசியை தாங்கிப்பிடித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அசீம் வெளிமன்னா செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+