சங்கரய்யா -நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி! அரசியல் பண்பாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான சங்கரய்யா மற்றும் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்தச் சந்திப்பானது அவரது அரசியல் பண்பாடு மற்றும் நாகரீகம் ஆகியவற்றை வெளிக்கட்டும் விதமாக உள்ளது.

இது தொடர்பான விவரம் வருமாறு;

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்திலேயே அதிக வயதுடைய அரசியல் தலைவர்களாக திகழும் சங்கரய்யாவையும், நல்லகண்ணுவையும் மரியாதை நிமித்தமாக அமைச்சர் உதயநிதி சந்தித்து பேசியிருக்கிறார். இருவருக்குமே பொன்னாடைகள் அணிவித்து கவுரவித்த அவர், உடல்நலம் பற்றி அக்கறையுடன் கேட்டறிந்தார். அரசியல் பொதுவாழ்வில் தூய்மையானவர்களாக விளங்கும் சங்கரய்யாவிடமும், நல்லகண்ணுவிடமும் அமைச்சர் உதயநிதி ஆசியும் பெற்றிருக்கிறார்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சங்கரய்யாவை சந்திக்கச் செல்லும் தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் சங்கரய்யா வீட்டுக்கு வந்துவிட்டார். சங்கரய்யாவிடம் அமைச்சர் உதயநிதியை அறிமுகம் செய்து வைத்த கே.பாலகிருஷ்ணன், அவரது செயல்பாடுகள் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

 இந்திய கம்யூனிஸ்ட்

இந்திய கம்யூனிஸ்ட்

இதேபோல் நல்லகண்ணுவை அமைச்சர் உதயநிதி சந்திக்கச் செல்லும் தகவல் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு முன் கூட்டியே முறையாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரும் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தார். எதிர்பாராத விதமாக டெல்லியிலிருந்து வந்திருந்த டி.ராஜாவும் அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்தியிருக்கிறார். ஒரே நாளில் அடுத்தடுத்து இரு பெரும் அரசியல் தலைவர்களை சந்தித்து கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

 அரசியல் பண்பாடு

அரசியல் பண்பாடு

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றது அவரது அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. முதல்முறையாக அமைச்சர் பதவியேற்றதை தொடர்ந்து இந்தச் சந்திப்பை நடத்தியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+