Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிருக்கு மாதந்தோறும் 1000 + 900 ரூபாய்.. உதயநிதி ஸ்டாலின் ஒரே போடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசு மாதம் தோறும் பெண்களுக்கு ரூ. 1000 + ரூ. 900 என 1900 ரூபாய் பணப் பலன்களை அளித்து வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.

Minister Udhayanidhi Stalin says that DMK govt giving women Rs 1900 rupees benefits

திமுக சார்பாக வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக இன்று வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி பிரச்சார வேனில் நின்றபடி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக சாதனைகள்: அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பேருந்தில் மகளிருக்கு விடியல் பயணத் திட்டத்தை கொண்டு வந்தவர் நம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பேருந்தில் விடியல் பயணத் திட்டம் மூலம் 465 கோடி முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப் பெண் கல்வித் திட்டம் மூலம் இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது திராவிட மாடல் ஆட்சியில் தான். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்.

துரோகி பழனிசாமி: இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர். பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.

தேர்தலுக்காகத்தான் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து போகிறார் பிரதமர் மோடி. சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது பிரதமர் மோடி வந்தாரா? மாநில உரிமையை காப்பதற்கான நிதி உரிமையை பெறுவதற்கான தேர்தல் இது" எனப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

1000 + 900 = 1900 ரூபாய்: மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், "திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. விடுபட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் தேர்தல் முடிந்த பிறகு ரூ. 1000 மாதம் தோறும் வழங்கப்படும்.

இலவச பேருந்து பயண திட்டத்தால் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ. 900 சேமிக்கின்றனர். ஏற்கனவே மாதம் தோறும் 1000 கிடைக்கிறது. இதன் மூலமாக திமுக அரசு மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1,900 வரை பணப் பலன்களை அளித்து வருகிறது" எனக் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+