Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுய உதவிக்குழுக்கள்.. சட்டென விசாரித்த உதயநிதி ஸ்டாலின்.. பெண்களுக்கு பணமழைதான்.. அதிரடி திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். குறிப்பாக சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவது குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 21.07.2023 அன்று ஆய்வு செய்தார்.

Minister Udhayanidhi Stalins important announcement to self help groups of women in Tamil Nadu

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்புகளின் சார்பில் தமிழ்நாட்டின் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகள் போன்றவை அமைக்கப்பட்டு, பல்வேறு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வறுமை ஒழிப்புத் திட்டங்கள் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

அத்திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றில் அடைந்துள்ள இலக்குகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 21.07.2023 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பள்ளி மாணவ மாணவியரின் பசியைப் போக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், இளைஞர் திறன் திருவிழாக்கள், சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மகளிர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் செயல்பாடுகள், அவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகள், பூமாலை வணிக வளாகங்களின் செயல்பாடுகள், திறன் பயிற்சிகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அரசின் நலத் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகியவை குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்து, திட்டங்களை திறம்பட செயல்படுத்திட உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

Minister Udhayanidhi Stalins important announcement to self help groups of women in Tamil Nadu

மேலும், சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் நிலை. குறிப்பாக சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் அடைந்துள்ள முன்னேற்றம், இலக்கை விரைந்து எய்திட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் போன்றவை இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் திருமதி ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட திட்ட இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+