அண்ணாமலையை போய் பார்த்தீங்களா? சட்டென உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்வி.. "ஆ வசமாக வளைக்கிறாரே".. செக்!
சென்னை: திமுகவின் சொத்து பட்டியல் என்று அண்ணாமலை ஆவணங்கள் சிலவற்றை வெளியிட்டுவிட்டு அது தொடர்பாக பேட்டி கொடுப்பேன் என்று கூறிய நிலையில், இதுவரை பேட்டி கொடுக்காத அண்ணாமலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.
கடந்த 4 நாட்களாக ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தி வந்தனர்.
வருமான வரித்துறை சார்பாக இந்த ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளை செய்து வந்தது.

ரியல் எஸ்டேட் தொழில் துறையில் தமிழ்நாட்டில் முன்னணி நிறுவனமாக இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த 2 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்ததாக பாஜக, அதிமுக குற்றஞ்சாட்டி வந்தது.
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மீதும் சில புகார்களை அண்ணாமலை பிரஸ் மீட்டில் அவர் வைத்தார். திமுக மீது சரமாரி புகார்களை வைத்தார்.
திமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு என்றும் சிலவற்றை காட்டினார். இதில் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்தும் கடுமையான புகார்களை அவர் பட்டியலிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் இவர்களின் சொத்து உயர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் ஜி ஸ்கொயர் ரெய்டு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மத்திய அரசு உங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எங்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை. உங்களுக்குத்தான் நெருக்கடி கொடுக்கிறார்கள். உங்களிடம் ஒருவர் 1 வாரத்தில் பேட்டி கொடுக்கிறேன் என்று கூறினார். அவரிடம் போய் கேட்டீர்களா? அவரை போய் பார்த்து அவரிடம் கேள்வி கேட்டீர்களா?
அவர்தான் உங்களை திட்டி கடுமையாக விமர்சனம் செய்வாரே.அவரை போய் பார்ப்பீர்களா? சொல்லுங்கள்? ஒரு வாரத்தில் செய்தியாளர்களை சந்திப்பேன் என கூறிய அண்ணாமலையை ஏன் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கவில்லை..
நேற்று கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்தது குறித்து ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை?, என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக திமுகவின் சொத்து பட்டியல் என்று அண்ணாமலை ஆவணங்கள் சிலவற்றை வெளியிட்டுவிட்டு அது தொடர்பாக பேட்டி கொடுப்பேன் என்று கூறினார். 1 வாரத்தில் அவர் பேட்டி அளிப்பேன் என்று கூறிய நிலையில் இப்போது வரை அதை பற்றி அவர் பேட்டி கொடுக்கவில்லை.

விளக்கம் : முன்னதாக இந்த ரெய்டு தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தவறானது. ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது அல்ல.
ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவினர் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அல்ல. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயலால் ஜி ஸ்கொயர் பாதிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. ஜி ஸ்கொயர் சொத்து மதிப்பு என அண்ணாமலை குறிப்பிட்டுள்ள தொகை தவறானது, என்று குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications