விழுப்புரத்தில்.. ' நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க'.. நம்பிக்கை ஊட்டிய அமைச்சர் வன்னி அரசு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டகுப்பம் பகுதிக்கு வருகை புரிந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பிரச்சனைக்குரிய சுடுகாட்டுப் பகுதிக்கு சென்ற அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடுகாட்டுப் பகுதியை மீட்டு கொடுக்க வேண்டும் என, அந்த பகுதி மக்கள் நேரில் வலியுறுத்தியதுடன் கோரிக்கை மனுவையும் அளித்தனர். அவர்களிடம் நான் இருக்கிறேன். கவலைப்பட வேண்டாம் என்று அமைச்சர் வன்னியரசு ஆறுதல் கூறினார்.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான பெரிய கோட்டகுப்பம் பகுதியில் அதே பகுதி சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், இறந்தவரின் உடலை அடக்கம் செய்வது சம்பந்தமாக, நடுக்குப்பம் மீனவ கிராம மக்களுக்கும் பெரிய கோட்டகுப்பம் ஆதிதிராவிட இன் மக்களுக்கும், இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோட்டகுப்பம் பகுதியில் வீடுகள் சூறையாடப்பட்டு ஒருவருக்கொருவர் மோதி கொண்டதில் ஐந்து போலீசார் உட்பட பலபேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் பெரிய கோட்டகுப்பம் பகுதிக்கு வருகை புரிந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பிரச்சனைக்குரிய சுடுகாட்டுப் பகுதிக்கு சென்ற அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடுகாட்டுப் பகுதியை மீட்டு கொடுக்க வேண்டும் என, அந்த பகுதி மக்கள் நேரில் வலியுறுத்தியதுடன் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், இரண்டு சமூகமும் இணக்கமாக வாழ வேண்டும் என்பதுதான் நமது அரசின் விருப்பம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய வனனியரசு, ஆதிதிராவிட இன மக்களுக்கு வருவாய் துறை மூலம் 43 செண்டு சுடுகாட்டுக்காக ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது, இந்த இடத்தை மீட்டு கம்பிவேலி அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையாக வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
ஆதிதிராவிட இன மக்களின் சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது அதையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,
அதே போன்று வீடுகளை சூறையாடி தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நமது அரசு மக்களுக்கான நல்வழி காட்டும் அரசு இரண்டு சமுதாய மக்களும் இனக்கமாக வாழ வேண்டும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
நடந்த சம்பவங்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இனிமேல் இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். நாளை நடைபெறும் அமைதி கூட்டத்தில் மீனவர்கள் படகுகள் எங்கு நிறுத்த வேண்டும் என்பது குறித்தும் பேசப்பட்டு உரிய தீர்வு காணப்பட உள்ளது.
43 சென்ட் என்பது ஆதிதிராவிட மக்களுக்கு சுடுகாட்டுக்கான இடம் அங்கே படகுகளை நிறுத்துவது என்பது ஏற்புடையதல்ல அதேபோன்று மீனவ மக்களும் பாதிக்காத வகையில் அவர்கள் படுகுகளை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்பதுதான் தற்போது உள்ள பிரச்சனையாக உள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரச்சனைகள் உள்ளது அவைகளை கணக்கெடுப்பு நடத்தி ஓராண்டு காலத்தில் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வன்னியரசு உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications