விஜய் பாடல்களில் சமூக நீதியை தேடும் விசிக! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட அமைச்சர் வன்னி அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய்யை விமர்சித்ததாக கூறி, நாம் தமிழர் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதற்கு திமுக கண்டனம் தெரிவித்திருந்தது. அதெப்படி கண்டனம் தெரிவிக்கலாம்? திமுக-நாதக கூட்டா? என்கிற ரேஞ்சில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கேள்வி எழுப்பியிருந்தனர். குறிப்பாக அமைச்சர் வன்னி அரசு பேசிய கருத்துக்கள் திமுகவினரை ரொம்பவும் சூடாக்கியது. தற்போது திமுகவினர் பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கின்றனர்.

இடைத்தேர்தல் சமயத்தில், தாராபுரம் தொகுதியில் நாதக வேட்பாளர் கார்த்திகா பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது முதலமைச்சர் வருவதாக கூறி, தங்களது பிரச்சாரம் தடுக்கப்பட்டது என நாதகவினர் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

Vanni Arasu

"இன்னும் அரை மணி நேரம்தான். அதற்குள் நாங்கள் பிரச்சாரத்தையே முடித்துக்கொள்வோம். ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென எங்களை தடுத்து நிறுத்துகிறார்கள். நாங்களும் அரசியல் கட்சியைதானே நடத்துகிறோம். எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாதா? முறையான அனுமதி பெற்று வந்தவர்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?" என கார்த்திகா கேள்வி எழுப்பியிருந்தார். பஞ்சாயத்து இப்படி போய்க்கொண்டிருக்கையில், முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக கார்த்திகா, அவரது கணவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். என்தான் சீமானுக்கும்-திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட.. ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று சீமான் கூறியிருந்தார். ஆனால், ஸ்டாலினின் கண்டனத்தை திமுக ரசிக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த அமைச்சர் வன்னி அரசு, "ஆரிய கடப்பாரை கொண்டு.. திராவிட கோட்டையை இடிப்பேன் என சொன்னவர் சீமான். தனிமனித தாக்குதலில் ஈடுபட்ட சீமானின் இழிவான அரசியலை.. திமுக மறந்திருக்கலாம்! பெரியாரையும், கலைஞரையும் மேடைகளில் அநாகரீகமாக விமர்சித்தவர் சீமான். தந்தை பெரியாரையும், அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களைத்தான் விசிக ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை" என்று ஹைபிட்சில் பேசியிருந்தார்.

விசிகவுக்கும்-திமுகவுக்குமான உறவு என்பது தேர்தல் காலத்தை சார்ந்தது மட்டும் கிடையாது. அது கொள்கை ரீதியிலான உறவு. மதச்சார்பின்மையை பாதுகாக்க இரு கட்சிகளும் தொடர்ந்து களம் கண்டிருக்கின்றன. மக்கள் போராட்டத்தில் விசிகவின் போராட்டம் அளப்பரியது. இருந்தும், நாதக நிர்வாகிகள் கைது விஷயத்தில்.. இப்படி சட்டென வன்னி அரசு வார்த்தையை விட்டது திமுகவை ரொம்பவே டென்ஷன் ஆக்கியது.

வன்னி அரசு கருத்துக்கு, திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பாளர் அபிசுல்லா பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் தனது x பக்கத்தில், "உங்களுக்கு வெட்கமிருக்கானு நாங்க கேட்க மாட்டோம் மிஸ்டர் வன்னி அரசு. பார்ப்பனிய அடிமைகளை விசிக ஏற்காதா? ஆர்.எஸ்.எஸ் பிள்ளையோட இடுப்பில் தானே அமர்ந்திருக்கிறீர்கள். எதிர்நிலையில் நின்று எதிர்ப்பவர்களின் உரிமைகள் பறிபோன காலகட்டத்தில் எல்லாம் கழகம் அவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறது. அது எங்கள் வழக்கம். உங்கள் வழக்கமென்ன; ஜெயிக்கும் இடங்களில் போய் வெட்கமில்லாமல் ஒட்டிக் கொள்வதா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இன்னும் கூட விரிவாக விமர்சித்திருக்கிறார். ஆனால், இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு ஏற்கெனவே சொன்னதை போல தேர்தலுக்கானது மட்டும் இல்லை என்பதால்.. இந்த சண்டையை ஆரோக்கியமானது கிடையாது என்று ஜனநாயக அமைப்புகள் கருதுகின்றன. ஒன்று சேர்ந்து நின்று களம் காண வேண்டியவர்கள்.. வன்னி அரசின் வார்த்தைகளால் இப்படி மோதிக்கொள்ளக்கூடாது என்றும் கூறியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+