கன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி?.. சுகாதாரத் துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.

Recommended Video

    கன்னியாகுமரியில் 3 பேர் உயிரிழப்பு... சுகாதார துறை விளக்கம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Minister Vijayabaskar says how the 3 deaths in Kanyakumari GH happens today

    இந்த நிலையில் நாகர்கோவிலில் கொரோனா வார்டில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 3 பேர் ஏற்கெனவே பலியாகிவிட்டனர். இதையடுத்து இன்று ஒரே நாளில் அதே மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர்.

    3 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இவர்களின் இறப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

    அதில் அவர் கூறுகையில், இன்று கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள 3 உயிரிழப்புகள் குறித்த விளக்கம் கீழ் வருமாறு:

    1. 2 வயது ஆண் குழந்தை- பிறவி எலும்பு நோய்
    2. 66 வயது ஆண் நீண்ட நாள் சிறுநீரக நோய் காரணமாக உயிரிழப்பு.
    3. 24 வயது ஆண் நிமோனியா தொற்றினால் குருதியில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாக உயிரிழப்பு.

    மேற்குறிப்பிட்டுள்ளவர்களின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் விதிகளின்படி கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+