கலர் கலரா சூட்கேஸ்... கவர் மீது அம்மா.. பகிரங்கமாக தரும் அமைச்சர்கள்.. அதுவும் சட்டசபையில்!
சென்னை: எல்லாரும் பார்க்கும்படியாகவே அமைச்சர்கள் சூட்கேஸ் தருகிறார்கள்.. அதுவும் சட்டசபையில்!
பொதுவாக சட்டசபையில் மானிய கோரிக்கை நடந்தால் அன்றைய தினம் விருந்து சாப்பாடு கமகமக்கும். ஆனால் இந்த முறை அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு ஏதாவது கிப்ட் தந்து அசத்த வேண்டும் என்று நினைத்தார்கள்.

அதன்படி, ஒவ்வொருவரும் விதவிதமான பரிசுகளை வழங்க முடிவு செய்தனர். நேற்று வனத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அதனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எல்லாருக்கும் தன் சார்பாக திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி வழங்கினார். கூடவே சிக்கன் பீஸ்களும் ஆர்டர் செய்தார்.
பின்னர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கேசி கருப்பணன் எல்லாருக்கும் ஒரு சூட்கேஸ் வழங்கினார். இப்படி தினம் தினம் அமைச்சர்கள் சூட்கேஸ்களை எம்எல்ஏக்களுக்கு தர போகிறார்களாம்.

இன்னும் 25 நாளைக்கு விவாதம் நடக்கபோகிறது, என்றால் 25 நாளும் சூட்கேஸ்கள் தரப்போகிறார்களா அல்லது வேறு ஏதேனும் தந்து இன்ப அதிர்ச்சி அளிக்க போகிறார்களா என தெரியவில்லை. ஆனால், தரப்பட்டுள்ள சூட்கேஸ்கள் அனைத்துமே காஸ்ட்லியாக உள்ளன. ப்ளு கலர், மெரூன் கலர் என கலர் கலராக இருக்கிறது.

அந்த சூட்கேஸ்களில் ஜெயலலிதா படம் பொறிக்கவும் அமைச்சர்கள் தவறவில்லை. இந்த மாசம் முடிவதற்குள் அமைச்சர்கள் என்னென்ன கிப்ட்களை எம்எல்ஏக்களுக்கு தந்து அசத்த போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications