4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை கடற்படையால் கடலில் மூழ்கடிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து இந்த விவகாரம் குறித்து தனது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிவு செய்துள்ளது.

Ministry of External Affairs condemn to Sri Lanka

இந்த சூழலில் 4 தமிழக மீனவர்கள் கடலில் மூழ்கடிகப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு குழுவை இலங்கை அரசு நியமித்துள்ளர். ராஜபக்சே ஒரு குழுவையும், இலங்கை கடற்தொழில் அமைச்சகம் ஒரு குழுவையும் நியமித்திருக்கிறது.

Recommended Video

    காஞ்சிபுரம்: 4 மீனவர்கள் பிரச்சனை மிகவும் துரதிருஷ்டமானது.. அமைச்சர் ஜெயக்குமார் வேதனை..!

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டணத்தை சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவர் படக்கில் 4 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் அவர்கள் கடந்த 4 நாட்களாக காணாமல் போனதால் தீவிர தேடுதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.

    மீனவர்கள் படகில் இலங்கை கடற்படை போட்டை மோதச்செய்து இந்த கொட்டுர காரியத்தை செய்திருக்கின்றனர். இதனிடையே சிறிதுகாலம் அமைதியாக இருந்த இலங்கை இப்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக தனது சுயரூபத்தை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறது.

    இலங்கையின் வாலை ஒட்ட நறுக்கும் வகையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்களும் மீனவ சங்கப் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை உடற்கூராய்வு செய்து அனுப்புவதற்கு திட்டமிட்ட இலங்கை பின்னர் உடற்கூராய்வு செய்யாமலேயே அனுப்புவதற்கு இசைவு தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் மீனவர்களின் உடல்களை தமிழகத்தில் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்பது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+