தவெக ஸ்டார் தொகுதிகளில் யார் எம்எல்ஏ? மின்னம்பலம் கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருக்கு வெற்றி வாய்ப்பு குறித்து மின்னம்பலம் கருத்துக் கணிப்புகள் நடத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மின்னம்பலம் சார்பில் எடுக்கப்பட்டு அதன் முடிவுகளும் நேற்று வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப கணிப்புகள் நடத்தப்பட்டது.

aadhav arjuna

அதில் அடுத்த முதல்வர் யார், மண்டலவாரியாக எந்த கட்சிக்கு வெற்றி, அடுத்த எம்எல்ஏ யார் உள்ளிட்ட கேள்விகளுக்கு கணிப்புகளை நடத்தியுள்ளது. இதில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இருந்தன.

அதிமுக, திமுக வாக்குகளை தவெக பிரிக்கும் என கணிக்கப்பட்டது. விஜய்யின் தவெக 233 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியது. இதில் மின்னம்பலம் கருத்துக் கணிப்பின் படி அக்கட்சியின் முக்கிய முகங்களுக்கு தேர்தலில் எந்த மாதிரியான ஆதரவு கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் அக்கட்சியில் விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோர் போட்டியிடும் ஸ்டார் தொகுதிகளின் நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

1. விஜய் (தமிழக வெற்றிக் கழகம்) - பெரம்பூர் தொகுதி

தமிழக அரசியலில் முதல்முறையாகக் களம் கண்டுள்ள நடிகர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். எக்ஸிட் போல் முடிவுகளின்படி, விஜய் இந்தத் தொகுதியில் 46 சதவீதம் வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது. திமுக வேட்பாளர் 40 சதவீதமும் பாமக வேட்பாளர் திலகபாமாவுக்கு 10 சதவீதம் வாக்குகளும் கிடைக்கும். சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் 4 சதவீத வாக்குகளையும் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

2. புஸ்ஸி ஆனந்த்

விஜய்யின் வலதுகரமாகக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்த் போட்டியிட்ட தொகுதியிலும் தவெக-விற்கான ஆதரவு வலுவாக உள்ளது. இவர் தனது தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் 30 சதவீத வாக்குகளையும் பெறுவர். அதிமுக வேட்பாளர் திநகர் சத்யா 32 சதவீத வாக்குகளை பெறுவார். நாதக வேட்பாளர் அனுவுக்கு 4 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

3. செங்கோட்டையன் - கோபிசெட்டிபாளையம்

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார். எக்ஸிட் போல் முடிவுகளின்படி, அவர் தனது தொகுதியில் உறுதியான முன்னிலையில் உள்ளார். அவர் 33 சதவீத வாக்குகளை பெறுவார். திமுகவின் நல்லசிவம் 32 சதவீத வாக்குகளையும் அதிமுகவின் வி.பி.பிரபு 29 சதவீத வாக்குகளையும் நாதக சீதாலட்சுமி 6 சதவீத வாக்குகளையும் பெறுவர்.

4. ஆதவ் அர்ஜுனா

தவெக சார்பில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனா, ஆரம்பத்தில் கடும் போட்டியைச் சந்தித்தாலும், தற்போது அந்தத் தொகுதியில் சம பலத்துடன் அல்லது சிறிய முன்னிலையில் இருப்பதாகக் கணிப்புகள் கூறுகின்றன. ஆதவ் 32 சதவீத வாக்குகளுடனும் திமுக வேட்பாளர் கார்த்தி 36 சதவீதமும், அதிமுகவின் விஜயகுமார் 26 சதவீதமும் , நாதகவின் ரோஷினி 5 சதவீத வாக்குகளையும் பெறுவார் என மின்னம்பலம் கணித்துள்ளது.

5. அருண்ராஜ்

தேர்தல் களத்தில் கவனிக்கப்பட்ட மற்றொரு இளம் வேட்பாளரான அருண்ராஜ், தனது தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலோ அல்லது இழுபறி நிலையிலோ இருப்பதாக மின்னம்பலம் எக்ஸிட் போல் தெரிவிக்கிறது. அதாவது அருண்ராஜ் 31 சதவீத வாக்குகலையும் திமுகவின் ஈஸ்வரனும், அதிமுகவின் சந்திரசேகரும் தலா 30 சதவீத வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் ரேவதி 8 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் கருத்துக் கணிப்புகள்தான். உண்மையில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை வரும் 4 ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+