தீவிர இருமல்! விஜயகாந்துக்கு திடீர் மூச்சுத்திணறல்? - ஆக்ஸிஜன் மாஸ்கில் கேப்டன்?
சென்னை: விஜயகாந்துக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மியாட் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.
உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மார்பு, சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நவ. 23ஆம் தேதி வெளியிட்ட அந்த அறிக்கையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் நன்றாக ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துகள் அனைத்தையும் அவர் உடல்நிலை ஏற்று கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, விஜயகாந்த் சுயநினைவோடு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மியாட் மருத்துவமனையில் இருக்கும் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாகவும் அவருக்கு திடீரென 24 மணி நேரமாக உடல்நிலை சீராக இல்லை என்றும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென தீவிர இருமல் தொந்தரவால் அவதிப்படும் விஜயகாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு பைப்பாப் மாஸ்க் எனப்படும் அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் மூலம் கூடுதல் ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட சிகிச்சை குறித்து விஜயகாந்த் குடும்பத்தினருடன் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications