சென்னை மெரினா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அற்புதம்.. வியந்து போய் பார்த்த போலீஸ்
சென்னை: சென்னை மெரினா கடற்கரை மணலில் அற்புதான சிலை ஒன்று கிடைத்துள்ளது. அதை பார்த்து வியந்து போன போலீசார், இதை யாராவது கடத்தல் கும்பல் இங்கு போட்டார்களா என்று சந்தேகம் அடைந்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை மெரினா கடற்கரை உலகப்புகழ் பெற்ற மிக நீளமான கடற்கரைகளில் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். சனி , ஞாயிறு உள்பட வார இறுதி நாட்கள், மற்றும் விடுமுறை நாட்களில லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக இருக்கிறது. மெரினாக கடற்கரை என்பது அண்ணா சதுக்கம் தொடங்கி பட்டினம்பாக்கம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மணல் பரப்பு பரந்து விரிந்து காணப்படுகிறது.

இங்கு ஆயிரக்கணக்கான கடைகள் காணப்படுகிறது.. அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, கலைஞர் சமாதி,ஜெயலலிதா சமாதி என நினைவிடங்களும் இங்கு தான் இருக்கின்றன. தமிழகத்தின் அரசியல் மற்றும் நினைவுச்சின்னங்களின் அடையாளமாக திகழும் மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த சுற்றுலா தளமாக இருக்கிறது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில், ஜெயலலிதா சமாதிக்கு பின்புறம் உள்ள கடற்கரை மணலில் புதைந்த நிலையில் ஐம்பொன் சிலை ஒன்று ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது. அந்த வழியாக ரோந்து சென்ற கடலோர காவல்படை போலீசார் அதனை கண்டெடுத்தனர்.
அந்த சிலை விலை மதிப்புள்ள காலபைரவர் சிலை என்பதை கண்டறிந்தனர். இந்த சிலை சுமார் ஒரு அடி உயரம் இருந்தது. சிலை கடத்தல் கும்பல்களை சேர்ந்தவர்கள் யாராவது, இந்த காலபைரவர் சிலையை அங்கு போட்டு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த சிலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை கடலோர காவல்படையினர் தெரிவித்தனர். சென்னை மெரினா கடற்கரையில் கால பைரவர் சிலை கண்டெடுக்கப்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications