சென்னைக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஆம்னி பஸ்கள்.. இதுதான் ரியல் தீபாவளி பரிசு
சென்னை: தீபாவளிக்கு முதல் நாளான இன்று சென்னையில் இருந்து கோவைக்கு வெறும் 450 ரூபாய் தான் டிக்கெட் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுவும் ஆம்னி பேருந்துகளில் மிக குறைவான டிக்கெட் விலை என்றால் நம்ப முடிகிறதா.. நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. மதுரைக்கு டிக்கெட் எவ்வளவு தெரியுமா? கேட்டால் அசந்து போவீர்கள்..
சென்னையில் தீபாவளி சமயத்தில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கும். தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் இருந்து, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், என எந்த பக்கம் போனாலும் டிக்கெட் விலை ஆயிரத்தை தாண்டும். 2 ஆயிரம் ரூபாய் .. 3000 ரூபாய் என்கிற அளவில் தான் இருக்கும்,..

ஒவ்வொரு ஆண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக உள்ளதாக மக்கள் புகார் தெரிவிப்பதும், அரசு சில பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதும் நடக்கும். ஏன் கடந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது கூட டிக்கெட் கட்டணம் மிக கடுமையாக உயர்த்தப்பட்டது. 2000 , 3000 என்கிற அளவில் இருந்தது. இதனால் அப்போது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. சுமார் 80க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்தது. ஏராளமான ஆம்னி பேருந்துகளுக்கு அப்போது அபராதமும் விதித்தது.
இதனால் ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக கூட அறிவித்து அதிர வைத்தன.. அதன்பிறகு பேச்சு வார்த்தை நடத்திய தமிழக அரசு, ஆம்னி பேருந்துகளை விடுவித்தது.. அத்துடன் ஆம்னி பேருந்துகளுடன் அதிக கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை குறைக்க வைத்தது.
வழக்கமான கட்டணத்தைவிட இந்த 30 சதவீதம் கட்டணத்தை குறைக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதன் காரணமாக நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆம்னி பேருந்துகள் கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. அதேநேரம் 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் என்கிற அளவிலேயே தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களுக்கு இருந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் ஆம்னி பேருந்துகளில் 117600 பேர் பயணித்துள்ளனர். நேற்று முன்தினம் 1,260 ஆம்னி பேருந்துகளில் 50400 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.. நேற்று மட்டும் 1680 ஆம்னி பேருந்துகளில் 67,200 பேர் சென்னையில் இருந்த சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். பெரும்பாலானோர் நேற்றே சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டதால், இன்று ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் போதிய அளவில் நிரம்பவில்லை.
இதனால் சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் அதிரடியாக குறைந்துள்ளது. தீபாவளிக்கு முதல் நாளான இன்று சென்னையில் இருந்து கோவைக்கு வெறும் 450 ரூபாய் தான் டிக்கெட் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. 450 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்குள் தான் டிக்கெட் கட்டணம் இருக்கிறது.

மதுரைக்கு 500 ரூபாயில் இருந்தே டிக்கெட் இருக்கிறது. சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஆம்னி பேருந்துகளில் பெரும்பாலும் 600 அல்லது 700 என்கிற அளவில் தான் உள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு என எல்லா ஊர்களுக்குமே இன்று டிக்கெட் கட்டணம் மிக குறைவாக உள்ளது.. செவ்வாய் புதன், வியாழன் போன்ற நாட்களில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இப்படித்தான் இருக்கும். அதுபோல் சனிக்கிழமையான இன்று இருப்பது, அதுவும் தீபாவளிக்கு முதல் நாள் இருப்பது ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைவாக உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்..
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications