ஒரே நேர்க்கோட்டில் 6 கிரகங்கள்.. வெறும் கண்ணாலும் பார்க்க முடியும்! விஷயம் சொன்ன விஞ்ஞானிகள்
சென்னை: சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் நேர் கோட்டில் அமைது என்பது மிகவும் அரிதான ஒன்று. அப்படியான சம்பவம் விரைவில் நடக்க இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
விண்வெளி நாம் நினைப்பதை விட பெரியது. நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இன்னும் விளக்கமாக சொல்வதெனில், மனிதர்கள் தோன்றிய காலம் தொடங்கி தற்போது வரை விண்வெளியை புரிந்து கொள்ள முயன்று வருகின்றனர். ஆனால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இன்னும் விண்வெளியை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

சோவியத் ரஷ்யா காலத்தில் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டனர். அது உலகம் முழுவதும் உள்ள சாமானிய மக்களுக்கும் விண்வெளி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் சாதாரண மக்கள் கூட விண்வெளியை உற்று கவனிக்க தொடங்கியிருக்கின்றனர். இவர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக இன்று விண்வெளியில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழ இருக்கிறது.
அதாவது, நம்முடைய சூரிய குடும்பத்தில் இருக்கும் 6 கோள்கள் விரைவில் நேர்க்கோட்டில் வர இருக்கின்றன. இதில் 4 கோள்கள் வரை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்படி கோள்கள் நேர் கோட்டில் வருவது மிக அரிதான விஷயம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "நமது சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் இருக்கின்றன. இதில் 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் தெரிய இருக்கிறது. இப்படி நிகழ்வது அவூர்வமான ஒன்றுதான். இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பதுதான் இதில் உள்ள சிறப்பு. புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்கள் நேர்க்கோட்டில் வரும்.
இந்த நிகழ்வு ஏறத்தாழ அடுத்த வாரத்திலிருந்து தொடங்கிவிடும். இருப்பினும் மிகச்சரியாக இவை அனைத்தையும் பார்க்க வேண்டும் எனில் ஜூன் 3ம் தேதிதான் பொருத்தமான நாள். இந்த நாளில், 6 கோள்களில் புதன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். மீதம் உள்ள 2 கோள்கைளை தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம்.
ஜூன் 3ம் தேதி சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இதனை பார்க்கலாம். பூங்கா, கடற்கரை போன்ற பகுதிகளிலிருந்து இதனை பார்க்க முடியும். இருப்பினும் ஒளிமாசு குறைந்த இடத்திலிருந்து பார்த்தால் தெளிவாக பார்க்க முடியும்" என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications