எதிர்பார்த்தது பலதும் கிடைக்கவில்லை.. அதிமுக ஒதுக்கிய 20 தொகுதிகள்.. ஏமாற்றத்தில் பாஜக!
சென்னை: எப்படியும் சேப்பாக்கம் ஒதுக்கப்படும் என்று தீவிரமாக தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார் குஷ்பு. ஆனால் பாஜகவிற்கு சேப்பாக்கம் தொகுதியை அதிமுக தர மறுத்துவிட்டது. பாமகவிற்கு சேப்பாக்கத்தை கொடுத்துள்ளது. பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற போகிறது. இன்னும் 4 வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. இதனால் அதிமுக மற்றும் திமுகஇரண்டு கட்சிகளுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளை இறுதி செய்து வருகின்றன.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 20 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. நேற்று இரவு தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த, பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், பா.ஜ.க அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.

இரவில் நடந்தது
அவர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் 20 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து இறுதி செய்யப்பட்டது.

சிவாரத்திரி அன்று
அப்படி இறுதி செய்யப்பட்ட பட்டியலை அதிமுகவோ அல்லது பாஜகவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அனேகமாக வரும் வியாழக்கிழமை (மகா சிவராத்திரி) அன்று அதிமுக போட்டியிட போகும் தொகுதிகள் பட்டியல்,. பாஜக போட்டியிட போகும் தொகுதிகள் பட்டியல், பாமக போட்டியிட போகும் தொகுதிகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகள் போட்டியிட போகும் தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பே வெளியானாலும் ஆச்சர்யப்படுதற்கு இல்லை

நான்கு தொகுதிகள்
இதனிடையே பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகள் பட்டியல் என்று ஒரு பட்டியலை ஊடக வட்டாரங்களில் வெளியாகி உள்ளது. முன்பு வெளியான உத்தேச பட்டியலில் இருந்த சில தொகுதிகள் இடம் பெறவில்லை. அப்படி மிஸ்ஸா தொகுதிகள் என்று பார்த்தால் ராசிபுரம், ராஜபாளையம், சேப்பாக்கம், இதில் சேப்பாக்கத்தில் பாமக போட்டியிடுகிறது. ராசிபுரம், ராஜபாளையத்தில் அதிமுக போட்டியிடுகிறது.

கௌதமிக்கு இல்லை
சேப்பாக்கம் தொகுதி எப்படியும் தங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தார் குஷ்பு. ஆனால் அதனை அதிமுக ஒதுக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதற்கு பதில் ஆயிரம் விளக்கு ஒதுக்கி உள்ளார்களாம். இதேபோல் கௌதமிக்கு ராஜபாளையம் கிடைக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் புதுபட்டியலில் விருதுநகர் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் கோவை தெற்கு வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

போட்டியில்லை
ராசிபுரம் தொகுதியை எல்.முருகன் கேட்டாராம். அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக அமைச்சர் சரோஜா உள்ளார். இதனால் அந்த தொகுதியை விட்டுத்தர மறுத்த அ.தி.மு.க., அதற்குப் பதிலாக தாராபுரம் தொகுதியை அளித்துள்ளதாம். தாராபுரத்தில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமியின் மகனுக்கு சீட் போட்டியிட உள்ளாராம். திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனும், துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வமும் போட்டியிடுவது உறுதி என்கிறார்கள். முருகன் இந்த முறை போட்டி இல்லையாம்.

எந்தெந்த தொகுதிகள்
சரி பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை இப்போது பார்ப்போம்
1. திருவண்ணாமலை
2. நாகர்கோவில்
3. குளச்சல்
4. விளவங்கோடு
5.ராமநாதபுரம்
6. மொடக்குறிச்சி
7. துறைமுகம்
8. ஆயிரம் விளக்கு
9. திருக்கோயிலூர்
10. திட்டக்குடி(தனி)
11 கோயம்புத்தூர் தெற்கு
12 விருதுநகர்
13 அரவக்குறிச்சி
14 திருவையாறு
15 உதகமண்டலம்
16 திருநெல்வேலி
17. தளி
18 காரைக்குடி
19 தாராபுரம் (தனி)
20. மதுரை வடக்கு












Click it and Unblock the Notifications