உங்களுக்கு இன்னும் பூத் சிலிப் வரலையா? வெறும் 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்யலாம்.. எப்படி?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை உங்களுக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கான வாக்காளர் அடையாளச் சீட்டை எளிமையாக நீங்களே டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் குறித்துப் பார்ப்போம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு தற்போது ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 756 வாக்காளர்கள் என்ற விகிதாசாரம் அமைந்துள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு பி.எல்.ஓ அலுவலர் என்ற வகையில் 75 ஆயிரத்து 64 பேர் பணியில் உள்ளனர்.

சட்டசபை தேர்தல் பணிகள்
தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தேர்தல் ஆணையத்தால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100 சதவீதம் வாக்காளர்களை ஓட்டுப்போட வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கான 'பூத் சிலிப்' (வாக்குச்சாவடி சீட்டு) வழங்கும் பணி கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது.
வாக்குச்சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர். பூத் சிலிப்பில் வாக்காளர்கள் ஓட்டுப் போட வேண்டிய வாக்குச்சாவடி விவரம், பாகம் எண், வரிசை எண், அமைவிட பகுதி என அனைத்து விவரங்களும் இருக்கும். க்யூ ஆர் கோடு வசதியும் உள்ளது. அதனை ஸ்கேன் செய்து கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
பூத் சிலிப் விநியோகம்
வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக 'பூத் சிலிப்' அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜெராக்ஸ் இயந்திரத்தில் பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 5.73 கோடி வாக்காளர்களுக்கும் 'பூத் சிலிப்புகளை பி.எல்.ஓ. அலுவலர்கள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் போது 'பூத் சிலிப்' எடுத்துச் சென்று வாக்களிக்க வேண்டும்.
பூத் சிலிப் கிடைக்கவில்லை என்றால்
உங்களுக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரவில்லை என்றாலோ, அல்லது வெளியூரில் தங்கியிருப்பதாலோ கவலைப்பட தேவையில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக நீங்களே வெறும் 2 நிமிடங்களில் உங்களது பூத் ஸ்லிப்பை எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை மைய இணையதளமான https://electoralsearch.eci.gov.in/ என்ற முகவரிக்கு செல்லவும். "Search in Electoral Roll" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு மூன்று வழிகளில் தேடுவதற்கான ஆப்ஷன்கள் தோன்றும்.
நீங்களே டவுன்லோடு செய்யலாம்
Search by EPIC: இது மிக எளிமையான வழி. இதில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும், மாநிலத்தையும் உள்ளிட வேண்டும்.
Search by Details: உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை எண் இல்லை என்றால், உங்கள் பெயர், தந்தை/ கணவர் பெயர், வயது, பாலினம், மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி ஆகிய விவரங்களை பிழையின்றி உள்ளிட வேண்டும்.
Search by Mobile: உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி மூலம் வெரிஃபை செய்தும் தேடலாம்.
மேற்கண்ட மூன்றில் ஏதேனும் ஒரு வழியை தேர்ந்தெடுத்து, விவரங்களை உள்ளிட்ட பிறகு, திரையில் தோன்றும் Captcha எழுத்துகளை சரியாக டைப் செய்து, Search என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்போது உங்களது பெயர், வயது, வாக்குச்சாவடி மையத்தின் பெயர் உள்ளிட்ட முழுமையான வாக்காளர் விவரங்கள் திரையில் தோன்றும்.
அதற்குக் கீழே உள்ள Action என்படஹ்ற்கு நேராக இருக்கும் View Details என்பதை கிளிக் செய்தால், உங்களது முழுமையான வாக்காளர் தகவல் சீட்டு திறக்கப்படும். அந்த பக்கத்தின் கீழே இருக்கும் Print Voter Information என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம், உங்கள் பூத் ஸ்லிப்பை PDF வடிவில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
ஆப் மூலமாக பூத் சிலிப் பெற
செயலி மூலமாகவும் பூத் சிலிப்பை டவுன்லோடு செய்யலாம். உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் மொபைலில் 'Voter Helpline' என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். செயலியை திறந்து, உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும். புதிய பயனராக இருந்தால் New Use' என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
செயலியின் முகப்பு பக்கத்தில் உள்ள Search Your Name in Electoral Roll என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதில் Search by Barcode, Search by Details அல்லது Search by EPIC No என்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை உள்ளிடுவது மிக எளிமையான முறை. விவரங்களை உள்ளிட்டு Search கொடுத்ததும், உங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் ஸ்லிப் திரையில் தோன்றும். திரையின் உள்ள Download ஐகானை கிளிக் செய்து, அதனை உங்கள் மொபைலில் சேமித்துக் கொள்ளலாம். அதனை வரும் 23 ஆம் தேதி கொண்டு சென்று வாக்களிக்கலாம்.
-
வில்லிவாக்கத்தில் இழுபறி.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஜாக்பாட்? முக்கிய பிரச்சனையே இதுதான்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே! -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications