பெரியார் ஒரு உலகத்தலைவர்... தமிமுன் அன்சாரி பேச்சு
சென்னை: பெரியார் ஒரு உலகத்தலைவர் என்றும், அவர் தமிழகத்தில் பிறந்த காரணத்தால் குறுகிய வட்டத்திற்குள் மட்டும் அவர் கொண்டாடப்படுவதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்தவிழா நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பெரியார் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி பேசினார்.

சிலை வழிபாட்டில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், சிலைகளை மதிப்பவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். சமீபகாலமாக பெரியாரின் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாக வேதனை தெரிவித்த அவர், பெரியாரின் சிலைகளை மட்டும் உடைக்கவில்லை, அவரின் கொள்கைகளையும் உடைப்பதால் தான் அதனை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், பெரியார் ஐரோப்பிய நாடுகளிலோ, அமெரிக்காவிலோ பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உலகத் தலைவராக போற்றப்பட்டிருப்பார் என்றும், அதுகூட வேண்டாம் இங்கிருக்கும் டெல்லியில் பிறந்திருந்தால் கூட பெரியார் இந்தியத் தலைவராக போற்றப்பட்டிருப்பார் எனவும் கூறினார். தமிழகத்தில் அவர் பிறந்த காரணத்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் போற்றப்படுவதாக தெரிவித்தார்.
பெரியாரின் நூல்களை அனைத்து நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த தமிமுன் அன்சாரி, பெரியாரின் தத்துவங்களை அனைத்து நாட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை கடந்து, சமூக நீதிக்காக அவர் நடத்திய போராட்டம் காரணமாகவே அவரை போற்றுவதாக தமிமுன் அன்சாரி விளக்கம் அளித்தார். பெரியார் அரசியல்வாதியல்ல அவர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி என புகழாரம் சூடினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications