Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலுக்கு வர்றாங்க மு.க.அழகிரி மகள்? கனிமொழிக்கு பின் கயல்விழி Entry.. மாமதுரையே பத்திக்கிச்சு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கலைஞர் கருணாநிதி குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் சோடை போனதில்லை. முதல்வர் ஸ்டாலின், முக அழகிரி, துணை முதல்வர் உதயநிதி, முரசொலி மாறன், தயாநிதி மாறன், என அனைவருமே அரசியலில் உச்சம் தொட்டவர்கள் தான். ஆனால் பெண்களில் கனிமொழி மட்டுமே அரசியலுக்கு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கலைஞர் குடும்பத்திலிருந்து மீண்டும் ஒரு பெண் அரசியலுக்கு வர இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை திமுகவிலிருந்து பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டு இருக்கும் கலைஞரின் மகனும் முதல்வர் ஸ்டாலினின் சகோதரருமான முக அழகிரியின் மகள் கயல்விழி தான் என்கின்றனர்.

தமிழகத்தின் மிகப் பிரபலமான அரசியல் குடும்பம் என்றால் அது கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பம் என சொல்லலாம். மாணவப் பருவத்தில் இருந்து தீவிரமாக அரசியலை ஈடுபடுத்திக் கொண்ட கருணாநிதி தமிழ்நாடு அரசியலில் உச்ச பதவியான முதல்வர் பதவியை அலங்கரித்தவர்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 MK Alagiri dmk

திமுக குடும்ப அரசியல்

சில நேரங்களில் பிரதமர் பதவி கூட கலைஞருக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்ததாக சொல்வார்கள். கலைஞர் மட்டுமல்ல அவரது குடும்பமே அரசியல் குடும்பம் தான். முக அழகிரி, மு க ஸ்டாலின், முரசொலி மாறன், தயாநிதி, உதயநிதி, கனிமொழி என அந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்லும். கலைஞர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாவின் பிள்ளைகள் தான் முக அழகிரி, முக ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோர். இதில் செல்வியும் தமிழரசுவும் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

திமுக குடும்ப அரசியல்

கலைஞரின் துணைவியாரான ராசாத்தி அம்மாவின் மகள்தான் கனிமொழி. அவர் திமுக துணை பொது செயலாளடாகவும் எம்பியாகவும் இருக்கிறார். கலைஞர் இருந்தபோது டெல்லிக்கு மாறன், சென்னைக்கு ஸ்டாலின், மதுரைக்கு மு.க.அழகிரி என இருந்தது. மாறன் மறைந்த பிறகு அவரது மகன் தயாநிதி மாறன் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே கலைஞரின் அரசியல் வாரிசு யார் என்ற போட்டி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே ஏற்பட்டது.

ஸ்டாலின் அழகிரி

பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகம் என முடிவுகள் வர அந்த பத்திரிகையின் மதுரை அலுவலகம் எரிக்கப்பட்டது. அப்போது இருந்து கலைஞருக்கும் அழகிரிக்கும் மோதல் வெடித்தது. இடையே தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்த அழகிரியை கட்சியிலிருந்து நீக்கினார் கலைஞர். அதற்கு பிறகு அவரது மரணம் வரை அழகிரி கட்சி பக்கமே வரவில்லை.

மு க ஸ்டாலின்

இதற்கிடையே தனது ஆதரவாளர் வட்டத்தை பெருக்கிக் கொண்ட மு க ஸ்டாலின் திமுகவின் அடுத்த முகமாக முன்னிறுத்தப்பட்டார். அழகிரியின் வலது கரங்களாக திகழ்ந்த பலரும் ஸ்டாலின் தரப்பில் தஞ்சம் புகுந்தனர். கலைஞர் மரணத்திற்கு பிறகும் தற்போது வரையும் அழகிரி திமுக பக்கம் வரவே இல்லை. காத்திருந்து வெறுத்துப் போன அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் மன்னன், எஸ் ஆர் கோபி போன்றோர். அழகிரியின் மகனான துரை தயாநிதி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த நிலையில் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார்.

மு க அழகிரி மகள்

அரசியலில் அவர் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை. இந்த நிலையில் திடீர் திருப்பமாக மு.க.அழகிரியின் குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வருவதற்கான சமிக்கைகள் தென்படத் தொடங்கி இருக்கிறது. முக அழகிரியின் மகளான கயல்விழி தான் அரசியலுக்கு வருவார் என்கின்றனர் மதுரை மாவட்ட உடன்பிறப்புகள். கலைஞர் மறைவுக்கு பிறகு அழகிரியின் குடும்பமும் ஸ்டாலின் குடும்பமும் நெருக்கமாக இருந்தாலும், அரசியல் என வரும்போது பிரிந்தே இருந்தனர்.

கயல்விழி அரசியல்

இந்த நிலையில் சமீபகாலமாக ஊடகங்களில் முகம் காட்ட தொடங்கி இருக்கிறார் கயல்விழி. மேலும் தீவிரமாக அரசியல் பேசியும் வருகிறார். தனது தந்தை தென்மாவட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, எம்பி தேர்தலில் வென்றது என பல விவகாரங்களை எடுத்துக் கூறிவரும் அவர் தற்போது வரை அழகிரி ஜெயித்த தொகுதியில் திமுக யாரும் ஜெயிக்க முடியாததையும் திருமலங்களும் பார்முலாவை அறிமுகப்படுத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார். தற்போதைய சூழலில் கயல்விழி அரசியலுக்கு வருவது 100% உறுதி என சொல்ல முடியாவிட்டாலும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். நிச்சயம் கலைஞர் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக கயல்விழி அரசியலுக்கு வருவார் என்கின்றனர் மதுரை உடன்பிறப்புகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+