அழகிரி பிறந்தநாள்... அனல் பறக்கும் போஸ்டர்கள் - சேர்த்துக்கிட்டா உதயம்.. இல்லன்னா அஸ்தமனமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அழகிரி சேர்ந்தால் உதயம் தவிர்த்தால் அஸ்தமனம்" என்று அவரது ஆதரவாளர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஐபேக் தேவையில்லை அழகிரி சேர்ந்தால் போதும் என்றும் அனல் பறக்கும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் அழகிரியின் ஆதரவாளர்கள். 70வது பிறந்தநாளை கொண்டாடப்போகும் அழகிரியின் மனதை கவரும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Recommended Video

    மதுரை: திமுகவை திணறடிக்கும் போஸ்டர்கள்: மு.க.அழகிரி ஆதரவாளர்களின் அட்ராசிட்டி!

    சினிமா நடிகர்களோ,அரசியல் தலைவர்களோ யாருக்காக இருந்தாலும் போஸ்டர் ஒட்டுவதில் மதுரைக்காரர்களே அடித்துக்கொள்ள முடியாது. விதம் விதமாக ரகம் ரகமாக வாசகங்களை எழுதி அசத்தி விடுவார்கள். வாழ்த்து வாசகங்களுக்கு ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று நினைக்கும் அளவிற்கு ஒரு சுவர் விடாமல் ஒட்டி விடுவார்கள்.

    மு.க அழகிரி பிறந்தநாளுக்கு ஆண்டு தோறும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே போஸ்டர்கள் ஒட்டி விடுவார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த ஆண்டு அழகிரி புதிதாக கட்சி துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மு.க அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் இதுவரை திமுக தலைமையில் இருந்து எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. திமுகவில் அவரை இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆண்டு பல போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

    திமுகவில் இருந்து அழகிரி நீக்கம்

    திமுகவில் இருந்து அழகிரி நீக்கம்

    மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி, திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகித்தார். மதுரை தொகுதி எம்பியாக வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார் அழகிரி. கடந்த 2014ம் ஆண்டு திமுகவுக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் கருத்துக்கள் தெரிவித்ததாக கூறி, அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    சமாதான படலம்

    சமாதான படலம்

    கட்சியில் இருந்து நீக்கிய நாள் முதலே ஸ்டாலினுக்கு எதிராக பல கருத்துக்களை கூறிய அழகிரி, 2016 சட்டசபைத் தேர்தலின் போது திமுகவிற்கு எதிராகவே செயல்பட்டார். குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இரண்டு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை.

    பிறந்தநாள் போஸ்டர்கள்

    பிறந்தநாள் போஸ்டர்கள்

    ஆண்டு தோறும் தனது பிறந்தநாளை ஆதரவாளர்களுடன் கொண்டாடி வருகிறார் அழகிரி. ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின் போது பல வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டி பலரது கவனத்தையும் ஈர்ப்பார்கள் அவரது ஆதரவாளர்கள். உங்களை வெல்ல யாரும் இல்லை.. நீங்களே தலைவரின் செல்ல பிள்ளை. கம்பீரமே, செயல் வீரரே என்றெல்லாம் கடந்த காலங்களில் ஒட்டி அசத்தினர்.

    சட்டசபைத் தேர்தலில் பங்கு

    சட்டசபைத் தேர்தலில் பங்கு

    அழகிரி பிறந்தநாளில் கரகாட்டம், ஒயிலாட்டம், முளைப்பாரி ஊர்வலம் களைகட்டும். கடந்த சில ஆண்டுகள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அழகிரி அவ்வப்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மட்டுமே நடத்தி வந்தார். திடீரென்று சட்டசபைத் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்று கூறிய அழகிரி ஓட்டு போடுவது கூட தனது பங்களிப்புதான் என்று தெரிவித்தார்.

    ஆதரவாளர்களுடன் சந்திப்பு

    ஆதரவாளர்களுடன் சந்திப்பு

    கடந்த மாதம் கோபாலபுரத்திற்கு வந்த அழகிரி தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசிக்கப் போவதாக கூறினார். சொன்னது போலவே, மதுரை மாட்டுத்தாவணி அருகே துவாரகா பேலஸ் மண்டபத்தில் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். திமுகவுக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். ஸ்டாலின் முதல்வராகவே முடியாது, எதையும் சந்திக்க தயாராக இருங்கள் என்றும் ஆதரவாளர்களிடம் பேசினார்.

    முடிசூடும் தகுதி

    முடிசூடும் தகுதி

    அழகிரி 70வது பிறந்தநாளை கொண்டாடப்போகிறார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தலைமையை கவரும் வகையிலும் அழகிரியின் மனதை குளிர வைக்கும் வகையிலும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். "முடிவில்லா கருணையும் முடிசூடும் தகுதியும் கொண்ட அஞ்சா நெஞ்சரே" என்று கூறி முதல்வர் தகுதி இவருக்கே இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர்.

    போஸ்டர்களால் பரபரப்பு

    போஸ்டர்களால் பரபரப்பு

    "அடிமட்ட தொண்டர்களின் அஸ்திவாரமே", அழகிரி சேர்ந்தால் உதயம் தவிர்த்தால் அஸ்தமனம்" என்று அவரது ஆதரவாளர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். "ஐபேக் தேவையில்லை அழகிரி சேர்ந்தால் போதும்" என்றும் கட்சியில் இணைக்க நூல் விட்டுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். தனது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை அழகிரி வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வெளியாகுமா பார்க்கலாம். உதயமா? அஸ்தமனமா? இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+