விஜய் குறித்து அன்றே கணித்த மு.க.அழகிரி மகள் .. பதவியேற்பு விழாவில் நெகிழ்ச்சி பேட்டி
சென்னை : "புதிய வரலாறு படைத்திருக்கிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. மேலும் மேலும் நல்லது செய்யணும். ரொம்ப ஆவலோடு எதிர்பார்க்கிறேன்' என்று முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க.அழகிரி மகள் பேட்டி அளித்தார். இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். முன்னதாக அந்த விழாவில் மு.க.அழகிரியின் மகளும் கலைஞரின் பேத்தியுமான கயல்விழி கலந்துகொண்டார். அங்கு தொலைகாட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர்கூறும் போது, "புதிய வரலாறு படைத்திருக்கிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. மேலும் மேலும் அவரு நல்லது செய்யணும். ரொம்ப ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இளைஞர் வந்திருக்கிறார். நிச்சயமா நல்லது செய்வார் என்று 100 சதவிகிதம் நம்புறேன். (செய்தியாளர் அப்போது ரொம்ப கஷ்டப்பட்டு வந்தாதாக விஜய் கூறுகிறாரே என்று கேட்டார்) நிஜமாகவே ரொம்ப கஷ்டப்பட்டு போராடி வெற்றி பெற்றிருக்காரு. அவருடைய போராட்டத்திற்கு நிச்சயமாக ஒரு நல்லது நடக்கும். இதற்காக தமிழக மக்களுக்கும், அவருடைய தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்பட ஸ்டாலின் குடும்பத்தினர் யாருமே பார்க்கவில்லை... திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என ஒருவர் கூட திமுக சார்பில் பங்கேற்கவில்லை.. அதிமுகவிலும் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் என முக்கிய தலைவர்கள் உள்பட யாருமே விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவில்லை..
கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது ஸ்டாலின் நேரில் சென்று பதவியேற்பில் பங்கேற்றார். ஆனால் விஜய்க்கு அப்படி பங்கேற்க செல்லவில்லை... அதேநேரம் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்டோர் பதவியேற்பில் பங்கேற்றனர்.
முன்னதாக அழகிரி மகள் கயல்விழி கடந்த ஏப்ரல் 16ம் தேதி அளித்த பேட்டியில் கூறும் போது, திமுகவுக்கு எதிராக நான் பேசவில்லை. கூட்டணி பலமும், பெரிய அளவுக்கான எதிர்ப்பற்ற தன்மையும் திமுகவை திரும்பவும் ஆட்சிக்குக் கொண்டு வருவது போல்தான் இருந்தது. ஆனால் விஜய் வந்த பிறகு நிலைமையே வேறு. களத்தில் விஜய் விளையாடுகிறார்.
நிச்சயம் கணிசமான வாக்குகளை விஜய் பிரிப்பார். திமுக அவரை குறைத்து எடைபோடுகிறது. அவர் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடுபொடியாக்கும். விஜய்யால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு சட்டசபை கூட அமையலாம். இந்த மாதிரியான சூழலில் அப்பாவையும், சீனியர் நிர்வாகிகளையும் அனுசரித்து, அவர்களுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் வெற்றி பெற நினைக்க வேண்டும். அதை செய்யாமல் சர்வாதிகாரமாக செயல்படுவது திமுகவின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும். இதே ஆதங்கம் கட்சியின் சீனியர்கள் பல பேரிடம் இருக்கிறது. இவ்வாறு கயல்விழி கூறியிருந்தார். அதுபோலவே விஜய் தொங்கு சட்டசபை அமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
