கிளாமரை வைத்து ஜெயலலிதாவின் ஆட்சி ஓடி விட்டது.. ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை
ஜெயலலிதா பற்றி கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்
சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இப்படி ஒரு வார்த்தையை முக ஸ்டாலின் சொன்னதே இல்லை!
ஜெயலலிதாவை பற்றி எப்போது பேசினாலும் சரி, பிரச்சாரத்தின்போதும் சரி திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன் வைப்பார். ஆனால் அப்போதெல்லாம் "ஜெயலலிதா அம்மையார்" என்ற பெயரை மட்டும் சொல்லி, அதிமுக ஆட்சி, மற்றும் ஊழலை விமர்சிப்பார்.

ஆனால் இப்போது ஒரு கிராம சபை கூட்டம் ஒன்றில் ஸ்டாலின் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஜெயலலிதாவை பற்றி முக ஸ்டாலின் மக்களிடையே பேசுகிறார்.
"அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்து திட்டங்களை செய்தார்களோ இல்லையோ, ஒழுங்கு பண்ணாங்களோ இல்லையோ, அதுபாட்டுக்கு.. அந்த அம்மா இருந்த வரையில், ஒரு கிளாமர்ல.. ஒரு லேடி.. ஒரு பெண்.. ஒரு முதலமைச்சரா இருக்கறாங்க அப்படின்ற ஒரு கிளாமர்ல அது ஓடுச்சு.." என்று பேசியுள்ளார்.
இது எந்த ஊர் கிராம சபை என்று தெரியவில்லை. ஆனால் ஜெயலலிதாவை கிளாமர் என்ற வார்த்தையை வைத்து 2 முறை பேசியது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இன்று ஜெயலலிதா பிறந்த நாள் என்பதால் ஸ்டாலின் பேசிய இந்த குட்டி வீடியோ ட்விட்டரில் போட்டு வைரலாக்கி வருகின்றனர். அம்மையாரை எப்படி கிளாமர் என்று சொல்லலாம் என இதற்கு கண்டனம் கிளம்பி உள்ளது.
this is not an insult to J.Jayalalithaa, but for the people of Tamil Nadu. ☹️ pic.twitter.com/euALN3bXel
— Vishwatma 🇮🇳 (@HLKodo) February 23, 2019
ஆனால் "ஜெயலலிதாவை கிளாமர் அதாவது பெண் கவர்ச்சி என்ற அர்த்தத்தில் ஸ்டாலின் சொல்லவில்லை, ஒருவித ஈர்ப்பு என்ற தொனியில்தான் பேசி உள்ளார்" என்று இதற்கு ஆதரவான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. எப்படி பார்த்தாலும் ஸ்டாலின் சொன்ன இந்த வார்த்தை புதுசாகத்தான் உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications