ரணகளம்! அஜித் பாடலுடன் முதல்வர் ஸ்டாலின் அரசியல் பயணம்.. ஏஐ வீடியோவை பகிர்ந்த உதயநிதி
சென்னை: முதல்வர் ஸ்டாலின் குறித்த ஏஐ வீடியோ ஒன்றை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அந்த ஏஐ வீடியோவில், முதல்வர் ஸ்டாலின் சிறுவயது முதல், அவரது அரசியல் பயணம் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவில் பின்னணியில் ஓடக்கூடிய பாடல், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த 'ரணகளம்' பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தனது எக்ஸ் தளத்தில் அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் ட்வீட்
இந்த நிலையில்தான், முதல்வர் ஸ்டாலின் குறித்த ஏஐ வீடியோ ஒன்றை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அந்த ஏஐ வீடியோவில், முதல்வர் ஸ்டாலின் சிறுவயது முதல், அவரது அரசியல் பயணம் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பல்வேறு காலகட்டங்களில் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற போராட்டங்கள், சென்னை மேயராக பதவியேற்பு, முதல்வரான பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் உள்ளிட்டவை இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. ஸ்டாலின் இளம்வயது புகைப்படம் முதல் தற்போதைய புகைப்படம் வரை அடுத்தடுத்து வரிசையாக மாறி வருவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
மு.க ஸ்டாலின் ஏஐ வீடியோ
"ஏய் மிருகத்தை எழுப்பி.. கோபத்தை கிளப்பி மன்னிப்பு கேட்டால் கிடைக்காதே.. முடிஞ்சது கணக்கு தவசம் உனக்கு... ராணுவம் வந்தும் தடுக்காதே.. வத்திக்குச்சி பத்திக்கிச்சி.." என்பது போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இளைய தலைமுறையினரை கவரும் வகையில் பின்னணி இசையுடன் இந்த வீடியோ அமைந்துள்ளது.
அஜித்தின் குட் பேட் அக்லி பாடல்
39 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், ஸ்டாலின் அரசியல் பயணத்தில் அவர் சந்தித்த சவால்கள், நெருக்கடிகள், போராட்டங்கள் உள்ளிட்டவை காட்டும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இந்த வீடியோவில் பின்னணியில் ஓடக்கூடிய பாடல், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த 'ரணகளம்' பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அஜித் பட பாடலை பயன்படுத்தி முதல்வர் ஸ்டாலினின் இந்த ஏஐ வீடியோ வெளியிட்டிருப்பது, அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
இன்றைய தலைமுறையினர் மத்தியில் சமூக வலைத்தள பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், அரசியல் கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பிரசார யுக்தியை மாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு நேரடி பதிலடியா?
தவெக தலைவர் விஜய் அரசியல் களத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு இதுவரை திமுக தலைமை நேரடியாக பதிலடி கொடுக்கவில்லை. அமைச்சர்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமே பதிலடி கொடுத்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அஜித் பட பாடலை பகிர்ந்து வெளியிட்டு இருக்க கூடிய இந்த வீடியோவை விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications