"புல் பவர்" தந்த ஸ்டாலின்.. இறங்கி அடிக்கும் டிஜிபி கந்தசாமி.. அடுத்த ஆபரேஷன் "இவர்"தானாமே..?
திமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ற தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: அடுத்தக்கட்ட ஆபரேஷனுக்கு திமுக தயாராகி வருகிறது.. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் திரட்ட அதிரடி உத்தரவு ஒன்றை டிஜிபி கந்தசாமிக்கு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
திமுக ஆட்சிக்கு வந்ததுமே மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அந்த திட்டம் கொரோனாவால் தள்ளி போடப்பட்டுவிட்டது.
எனினும் திமுக தேர்தல் அறிக்கையில், ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று ஸ்டாலினே ஏற்கனவே சொல்லி இருந்தார்..

கந்தசாமி
அதற்கேற்றபடி ஆட்சிக்கு வந்ததுமே, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கந்தசாமி ஐபிஎஸ் கொண்டு வரப்பட்டார்... அதுவரை அசால்ட்டாக இருந்த அதிமுக தரப்பு, கந்தசாமியை பார்த்ததும் சற்று கலக்கமாகிவிட்டது.. அதுமட்டுமில்லை.. "மிஸ்டர் கிளீன்" எனப்படும் லட்சுமி ஐபிஎஸ்ஸை இணை இயக்குநராக நியமனம் செய்ததும் அதிமுக மொத்தமாகவே வெலவெலத்து போய்விட்டது..

திமுக
அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை விஷயத்தில் ஸ்டாலினின் அதீத அக்கறைதான் இந்த நியமனங்கள் மூலம் தெரியவந்தது... ஆனால், ஆரம்பம் முதலே வேலுமணிதான் முதல் குறியாக தெரிந்தார்.. இந்த விஷயம் வேலுமணிக்கு நன்றாக தெரிந்திருந்தாலும், முக்கிய ஆவணங்கள், ஆதாரங்களை மறைக்கும் முயற்சியில் இறங்கினாலும் 2 விஷயத்தில் வேலுமணி உறுதியாக நம்பினார்..

கொறடா
ஒன்று, அதிமுக கொறடாவாக இருப்பதால் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நெருங்க முடியாது, மற்றொன்று, பட்ஜெட் கூட்டம் நடப்பதால் இப்போதைக்கு திமுக தன்னிடம் நெருங்காது என்று நம்பினார். ஆனால் கடந்த வாரமே வேலுமணிக்கான ஸ்கெட்ச் போடப்பட்டுவிட்டது.. டிஜிபி கந்தசாமி கடந்த வாரம் ஸ்டாலினை சந்தித்தபோது இது உறுதியானது..

ஆதாரங்கள்
தன்னுடைய நியமன நாளில் இருந்து, வேலுமணியின் முழு ஆதாரங்களை திரட்டுவதில்தான் கந்தசாமி மும்முரமாகி உள்ளார்.. அதன்படி, 2 மாதம் ஆதாரங்களை திரட்டிவிட்டு, ஆகஸ்ட் மாதத்தில் இதற்கான அதிரடியை ஆரம்பிக்கவும் முடிவாகி உள்ளது.. அதனால்தான், அதற்கு ஆபரேஷன் ஆகஸ்ட் என்றே பெயர் வைத்துள்ளனர்.. முதலில் விஜயபாஸ்கர், அடுத்து வேலுமணி, என்று நகர்கிறது...

அடுத்தது யார்?
அப்படியானால் அடுத்த குறி யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. இதில் 2 பேரின் பெயர்கள் அடிபடுகிறது.. ஒருவர் டெல்லிக்கு போய் கட்சியே மாற தயாராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, இன்னொருத்தர் ஏற்கனவே திமுக தரப்பில் சமாதான தூது அனுப்பி தோல்வியடைந்த விராலிமலை விஜயபாஸ்கர் என்ற கணிப்பு உள்ளது.. ஆனால், எதையும் எதிர்பாராமல் ட்விஸ்ட் வைப்பதில் திமுக ஸ்கோர் அடித்து வருவதால், சேலம் அல்லது தேனி பக்கம் திடீர் திருப்பம் ஏற்படலாம் என்றும் முணுமுணுப்புகள் கிளம்பி வருகின்றன.

கந்தசாமி
யார் மீது நடவடிக்கையாக இருந்தாலும், அவர்களின் அனைத்துவிதமான ஆதாரங்களை வலுவாக கையில் வைத்து கொண்டுதான், கந்தசாமியின் ஒவ்வொரு மூவ் தொடங்குகிறாம்.. ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து, சேகரித்த ஆதாரங்கள் அனைத்தையும், முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து, அதன்பிறகே ரெயிடு நடவடிக்கை நடந்து வருவதாக சொல்கிறார்கள்.. அதாவது பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக தரப்பு விமர்சித்தாலும், அது மக்களிடம் எடுபடாத அளவுக்கு, ஒருகுறையும் இல்லாமல் பக்காவாக திமுக காய் நகர்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications