சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொருளாதார நெருக்கடி: இலங்கை மக்களுக்கு உதவி செய்ய நன்கொடை வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய நன்கொடைகள் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ள மக்களுக்குத் தமிழ்நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துள்ளது. முதல் கட்டமாக 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ள்ன.

https://tamil.oneindia.com/memes/funny-memes-collection-on-ramzan-celebration-456973.html

இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

https://tamil.oneindia.com/memes/funny-memes-collection-on-ramzan-celebration-456973.html

நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்.

ECS மூலம் ஆன்லைனில் தொகையை அனுப்பும் பங்களிப்பாளர்கள், அவர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கும் அதிகாரப்பூர்வ ரசீதை அனுப்புவதற்கும் பின்வரும் விவரங்களை தயவு செய்து வழங்கவும்.

MK Stalin appeals to contribute humanitarian assistance for Srilankan people

பங்களிப்பாளரின் பெயர்:

பங்களிப்பு தொகை:

வங்கி மற்றும் கிளை

பணம் அனுப்பும் தேதி:

பரிவர்த்தனை குறிப்பு எண்:

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

மின்னஞ்சல் முகவரி:

தொலைபேசி எண்/ கைபேசி எண்:

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80Gன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.

English summary
Tamilnadu Chief Minister MK Stalin has appealed to contribute to the humanitarian assistance for the Srilankan people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X