1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்!
சென்னை: விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின், வேட்பாளரின் தந்தை விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் சிறு வேடத்தில் பாடல் பாடுவது போல் ஒரு வேடத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
ஸ்டாலின் அந்த பாடலை பாடி வாக்கு சேகரித்தார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 1988 ஆம் ஆண்டு மக்கள் ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்த பாடலுக்குதான் ஸ்டாலின் வாயசைத்தார்.

அந்த படத்தில் விஜயகாந்த் வேட்பாளராக களமிறங்குவார். அவருக்காக ஸ்டாலின் அந்த படத்தில் பாடலை பாடுவது போல் காட்சி இருந்தது. அந்த பாடலை முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுத, அதை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். அந்த பாடல் வரிகளை பார்க்கலாம்.
உங்கள் ஓட்டு கதிரவனுக்கு
எங்கள் ஓட்டு கதிரவனுக்கு
நாட்டு நடப்ப பாத்து போடுங்கம்மா ஓட்டு....
ஆண்: ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு
நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு
ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு
நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு
ஆண்: ஏற எறங்க பாத்து எடைகள கொஞ்சம் போடு
ஏற எறங்க பாத்து எடைகள போடு
நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகள போடு
ஆண்: ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு
நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு
குழு : .........................................
ஆண் : ..................................
ஆண் : ஓட்டுக்கு உன்னிடத்தில் வருபவன் யாரு
உழைப்பவனா ஊரை ஏய்ப்பவனா
தேர்தல் களத்தினிலே நிற்பவன் யாரு
தியாகம் செஞ்சவனா மோசம் செஞ்சவனா
ஆண் : ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொழுத்தர்கள
குழு : நம்பாதப்பா
ஆண் : நாட்டுக்கு உயிர் கொடுக்கும் நல்லவர
குழு : தள்ளாதப்பா
ஆண் : லஞ்ச பேய்கள வெரட்டணுமே
ஏழை துன்பம் தீர்ப்பவன் ஜெயிக்கணுமே அதுக்கு
ஆண் : ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ
அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு.....
பாரப்பா....
குழு : ...........................
ஆண் : எண்ணெய் விலைய கேட்டு
குழு : போடுங்கம்மா ஓட்டு
ஆண் : அரிசி விலைய பார்த்து
குழு : போடுங்கம்மா ஓட்டு
ஆண் : இந்த படை
குழு : போதுமா
ஆண் : இன்னும் கொஞ்சம்
குழு : வேணுமா
ஆண் : கொள்கையே இல்லாத கொடியவன் யாரு
கொடுமைக்கு பணியா வீரனும் யாரு
ஊழல் புரிஞ்சு வாழும் மனுஷனும் யாரு
அதை ஊருக்கு சொல்லும் உயர்ந்தவன் யாரு
ஆண் : உறவுக்கு கரம் கொடுப்பான் உங்க வீட்டு
குழு : தம்பியப்பா
ஆண் : உரிமைக்கு குரல் கொடுப்பான் தென்பாண்டி
குழு : சிங்கமப்பா
ஆண் : உதயக் கதிரும்தான் உதிக்குது பாரு
உடன் பிறப்பே நீ ஒன்றாக சேரு...
ஆண் : ஹேய் ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு
நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு
ஏற எறங்க பாத்து எடைகள போடு
நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகள போடு
ஆண் : ஹான் ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு
நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications