டோனை மாற்றிய ஸ்டாலின்.. இனி எதிர்க்கட்சியாக இப்படித்தான் அடிக்க போறாங்க போல.. விஜய்க்கு செக்!
சென்னை: முதல்வர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ள தோரணை கவனம் பெற்றுள்ளது. அடுத்த 5 வருடங்களுக்கு திமுக எந்த மாதிரியான எதிர்க்கட்சியாக இருக்க போகிறது என்பதற்கு முன்னோட்டமாக இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் பொதுவாக கடுமையாக பேசக்கூடியவர் அல்ல. மாநில உரிமை தொடர்பான விவகாரங்களில் கடுமையான அறிக்கைகளை வெளியிடக்கூடியவர் மற்ற நேரங்களில் கடுமையான விமர்சனங்களை வைக்க கூடியவர் அல்ல. அதிலும் தோல்விக்கு பின் கூட்டணி கட்சிகளுக்கு முழு சுதந்திரம் தொடங்கி பல விவகாரங்களில் மிகவும் தன்மையுடன் நடந்து கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ள தோரணை கவனம் பெற்றுள்ளது. மேலும், இன்று வெளியிட்ட அறிக்கையில் அவரது தமிழ் சொல்லாடல் GenZ தலைமுறையினர் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக இருந்தது.
ஸ்டாலின் மேற்கொள்ள போகும் அரசியல்
அடுத்த 5 வருடங்களுக்கு திமுக எந்த மாதிரியான எதிர்க்கட்சியாக இருக்க போகிறது என்பதற்கு முன்னோட்டமாக இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.

ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சனைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே... அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
"நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்" எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!, என்று கூறி உள்ளார்.
விஜய் புலம்பல்
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது முதல் உரையில் முன்வைத்த ஒரு தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. "தமிழக அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது; கடந்த கால அரசுகள் என் தலையில் மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்துள்ளன," என்று அவர் பேசியிருப்பது, அடுத்து வரப்போகும் நிதிநிலை மாற்றங்களுக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
தனது உரையில் நிதி மேலாண்மை குறித்து விரிவாகப் பேசிய முதல்வர் விஜய், "அரசாங்கத்தின் வரவு செலவு கணக்குகளை (Balance Sheets) நான் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தின் உண்மையான நிதி நிலை என்ன என்பதை மக்களுக்கு விளக்க ஒரு 'வெள்ளை அறிக்கை' (White Paper) விரைவில் வெளியிடப்படும். இந்த கடன் சுமையைக் கண்டு நான் அஞ்சவில்லை, ஆனால் இதை எப்படிக் கையாள்வது என்பதில் ஒரு தெளிவான திட்டம் தேவை," என்று குறிப்பிட்டார். இதைத்தான் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications