தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட CWMA சொன்னதும்! விஜய்க்கு கேட்டை சாத்திய கர்நாடகா- ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் (விஜய்) இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்.

mk stalin joseph vijay

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் #MekedatuDam விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.

ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA (Cauvery Water Management Authority- காவிரி நீர் மேலாண்மை வாரியம்) உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.

நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.

@CMOTamilNadu அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் தமிழகம் இதை ஒவ்வொரு முறையும் சட்ட போராட்டம் நடத்தி நியாயமாக இந்த அணை கட்டுவதை தடுத்து வருகிறது. அணை கட்டக் கூடாது என்பதுதான் இரு மாநிலத்திற்கு நன்மையை கிடைக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தாலும் மக்களின் நலனை விட்டுவிட்டு அரசியல் செய்வதிலேயே கர்நாடகா குறியாக இருந்து வருகிறது.

இதனால்தான் தமிழகத்திற்கு நியாயமாக திறந்து விட வேண்டிய தண்ணீரையும் திறக்காமல், மேகதாதுவில் அணை கட்டுவது என்ற அரசியலை கையில் எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்வர் விஜய், மேகதாது அணை கட்டும் இடத்தை பார்க்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் நாளைய தினம் விஜய் கர்நாடகாவுக்கு செல்வதாக அறிவித்திருந்தார்.

ஆனால் அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் கர்நாடகாவுக்கு விஜய் செல்லக் கூடாது என அறிவுறுத்தி வந்தனர். அப்படி சென்றால் எதையாவது சொல்லி கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் சதி செய்யும் என அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனாலும் விஜய் நாளை கர்நாடகாவுக்கு செல்வதாக இருந்தார். இந்த நிலையில் விஜய்யின் ஜனநாயகன் பட போஸ்டர்களை கர்நாடகா அமைப்பினர் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என கேஆர்எஸ் அணையில் அந்த மாநில பாஜக போராட்டம் நடத்தியது.

மேலும் வரும் 13 ஆம் தேதி வாட்டாள் நாகராஜ் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் கர்நாடகாவில் விஜய்க்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருவதால் விஜய், தற்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அதாவது காவிரி நீர் கோரிக்கையுடன் முதல்வர் விஜய் வந்தால் பெங்களூர் விமான நிலையம் முற்றுகை என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் டி.கே. சிவக்குமார் அத்தகைய ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: இரு மாநிலங்களுக்கும் இடையே மிக சுமூகமான சூழல் நிலவ வேண்டியது அவசியம். இந்த சந்திப்பை சிறிது காலம் ஒத்தி வைக்குமாறு முதல்வர் விஜய்யிடம் கேட்டுக் கொள்கிறேன். கர்நாடகா போராட்டக்களமாக மாறியுள்ள நிலையில் விருந்தினராக வருவது சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதைத்தான் எல்லா தமிழக அரசியல் கட்சியினரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+